Top posting users this month
No user |
Similar topics
ரஜினியின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்த கருணாநிதி
Page 1 of 1

நீதிமன்றங்கள் குறித்த ரஜினியின் சர்ச்சை கருத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் நீதிமன்றங்கள் கெட்டுப்போனால் நாடு நன்றாக இருக்காது என்று கூறியிருந்தார்.
இது குறித்து தி.மு.க தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ரஜினிகாந்தின் இந்தப் பேச்சு ஆழமான அர்த்தச்செறிவான பேச்சு மட்டுமல்லாமல், இன்றைய சூழலில் மிகவும் பொருத்தமான பேச்சும் ஆகும்.
அண்மைக் காலத்தில் நீதிமன்றங்களைப் பற்றியும், நீதிபதிகளைப் பற்றியும் பரவலாக எதிர்மறை கருத்துக்கள் சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் வரத் தொடங்கிவிட்டன.
செல்வந்தர்களும், அதிகாரச் செல்வாக்கு மிக்கவர்களும் எதையும் சாதிக்கலாம் என்ற நிலை வளர்ந்து வருகிறது; இதற்கான சான்றுகளும் வளர்ந்து வருகின்றன.
உச்சநீதிமன்றம் பல்வேறு பிரச்சினைகளில் ஏற்கனவே வழங்கியுள்ள தீர்ப்புகளை, காலத்திற்கேற்பவும் இடம் பொருள் ஏவலுக்கு ஏற்பவும் மாற்றியமைத்து கொள்ளலாம்; என்பன போன்ற கருத்து சிதைவுகள் வேகமாகப் பரவி வரும் இந்நாளில், ‘‘சூப்பர் ஸ்டார்'' ரஜினிகாந்த், வெளிப்படையாக மனம் திறந்து சொல்லி இருக்கும் இந்தக் கருத்து, ஜனநாயகத்திலும், இந்திய அரசமைப்புச் சட்டத்திலும் நம்பிக்கை உள்ள அனைவராலும் வரவேற்கத்தக்கதே ஆகும் என்று கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி
» தெளிவான பேச்சுக்கு
» ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
» தெளிவான பேச்சுக்கு
» ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum