Top posting users this month
No user |
Similar topics
உலகம் என்பது இலங்கைக்குள் இல்லை! அரைகுறை புத்திசாலிகளாக இருக்காதீர்கள்! மஹிந்த அமரவீர
Page 1 of 1

தேசிய அரசாங்கத்துக்கு எதிராக குரல் எழுப்புகின்றவர்கள் அரைகுறைப் புத்திசாலிகள் என்று மீன்பிடி, நீரியல் வளங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர கடுமையாக விமர்சித்துள்ளார்.
மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய அரசாங்கத்தின் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாதவர்களும், தேசிய அரசாங்கம் என்றால் என்னவென்று அறிந்து கொள்ளாத அரைகுறைப் புத்திசாலிகளும் நாங்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொண்டது குறித்து எதிர்ப்புக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
நாடாளுமன்றத்தினுள் எதிர்வரும் நாட்களில் ஏராளமான விடயங்கள் நடைபெறும். அவற்றை வெறுமனே எதிர்த்துக் குரல் எழுப்பிக் கொண்டிருப்பதால் எதுவித பலனும் கிடைக்கப் போவதில்லை. அவ்வாறு எதிர்த்துக் குரல் எழுப்பிக் கொண்டிருப்பவர்கள் உலகம் என்பது இலங்கைக்குள் உள்ளடங்கியிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் இலங்கை தான் உலகத்துக்குள் உள்ளடங்கியிருக்கின்றது. அதன் காரணமாக உலகின் போக்குக்கு ஏற்ப நாங்களும் எங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
தேசிய அரசாங்கத்திற்கு நல்லதோர் உதாரணம் தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுக் கொண்டமை குறித்து நாட்டின் எந்தவோர் பகுதியிலும் பச்சைக் கொடிகளால் அலங்கரிக்கப்படவோ, பட்டாசுகள் கொளுத்தப்படவோ இல்லை. இதுதான் இணக்க அரசியலின் சிறப்பான லட்சணம்.
இதனைப் புரிந்து கொள்ளாதவர்களே நாடு பிளவுபடப் போகின்றது என்பது போன்ற வெற்றுக் கோஷங்களை எழுப்பிக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எந்த நேரத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்க முடியும்: மஹிந்த அமரவீர
» எந்தவிதமான வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை: மஹிந்த அமரவீர
» விவாதத்துக்கு விடுக்கப்பட்ட அழைப்பை மைத்திரி ஏற்றார்! மஹிந்த பதில் இல்லை!- சட்டத்தரணிகள் சங்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum