Top posting users this month
No user |
ஜெயின் சமூகத்தினர் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறக்க அனுமதி: உச்ச நீதிமன்றம் அதிரடி
Page 1 of 1

ஜைனர்களின் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் மதச் சடங்குக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் விதித்த தடையை உச்ச நீதிமன்றம் நேற்று நிறுத்தி வைத்துள்ளது.
ஜைனர்கள் சிலர் ”சந்தாரா மதச்சடங்கு” என்ற பெயரில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
இந்நிலையில், ஜைனர்களின் இந்த மதச்சடங்கு தற்கொலைக்கு தூண்டுவதுபோல உள்ளதாக, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் கடந்த வாரம் தடை விதித்தது.
ஆனால் அந்த தீர்ப்புக்கு ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், அசாம், தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் உள்ள ஜைனர்கள் எதிர்ப்பு தெரிவித்து கண்டன பேரணி நடத்தினர்.
இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு ஜைன அமைப்புகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், நம்பிக்கை தொடர்பான தனிப்பட்ட விஷயங்களை பின்பற்றுவதற்கு அனைவருக்கும் சட்டப்படி உரிமை உள்ளது.
ஜைன மத தத்துவங்களை கவனத்தில் கொள்ளாமல், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனுக்களை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்துள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக மத்திய அரசு, ராஜஸ்தான் மாநில அரசு, மனுதாரர்கள் விரிவான பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum