Top posting users this month
No user |
Similar topics
செடியின் இலை வகை
Page 1 of 1
செடியின் இலை வகை
ஆடாதோடை இலை:
கபாதிக்கம், வாத தோஷம், பற்பல சுரம், சந்நிபாதம், பலவித வயிற்று நோய் ஆகியவற்றை போக்கும்.
வெண்நொச்சி இலை:
மகாவாதம்,பீனிசம், சுரம், இரைப்பு, பல்வலி, திரிதோஷம், இருமல், நீரேற்றம், கபசிரஸ்தாபம் ஆகியவற்றை நீக்கும்.
கருநொச்சி இலை:
வாதவலி, நாசி நோய், கபம், மண்டைக்குடைச்சல், சிரஸ்தாப ரோகம் ஆகியவை அகலும்.
வெள்ளாமணக்கு இலை:
அக்கினி மந்தம், வாதவலி, மார்பு நோய், மலக்கட்டு, காமாலை ஆகியவை நீங்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்கும்.
செவ்வாமணக்கு இலை:
வயிற்று வலி, செரியாத மந்தம், வாத கோபம், தேகக்கடுப்பு ஆகியவை நீங்கும்.
செம்பை இலை:
வாயுவின் கட்டிகள், சோபை, சரீர நீரேற்ற வாத சிலேஷ்ம தொந்தம் ஆகியவை தீரும்.
கருஞ்செம்பை இலை:
விப்புருதிக்கட்டி, கரப்பான், பிரமேகம், பித்த சிலேஷ்ம தொந்தம் ஆகியவற்றை போக்கும்.
வறட்பூலா இலை:
வறட்பூலா இலைகளை அரைத்து எருமை தயிரில் கரைத்து குடித்தால் பேதி, இரத்தபேதி மற்றும் பேதியால் உண்டாகின்ற வயிற்று வலியும், ஆயாசமும் தீரும்.
பாவட்டை இலை:
சிலேஷ்ம வாதம், வாத கப தோஷம், ஆயாசம், தாபசுரம், திரிதோஷம் ஆகியவற்றை நீக்கும். பசி உண்டாகும்.
பெருஞ்சின்னி இலை:
காணாக்கடி விஷமும், தெரியும் படி கடித்த பற்பல ஐந்து விஷங்களும் நீங்கும்.
சிறு சின்னி இலை:
வண்டு முதலிய கடி விஷங்கள், இன்னதென்று தெரியாத கடி விஷங்கள், இடுமருந்து, பிரமேகம், கணச்சுரம், அக்கினி மந்தம் ஆகியவற்றை போக்கும்.
விராலி இலை:
பெருமை வாய்ந்த துரிசை மென்மை ஆக்குவதை தவிர அடி கனத்த கட்டிகளையும், வீக்கத்தையும் போக்கும்.
எருக்கு இலை:
எலி விஷம், பெருவியாதி, சிலேஷ்ம நோய், கிருமி ரோகம், ஐந்து வகை வலி, கீல் வீக்கம், தனி வாத கோபம், சர்ப்ப விஷம், அக்கினி மந்தம், மலக்கட்டு ஆகியவற்றை நீக்கும்.
காட்டாமணக்கு இலை:
மேகக்கட்டி, புண், கரப்பான், பீலிகம், குன்மக்கட்டி, ஜனிக்கின்ற விரணங்கள், சிலேஷ்ம வாதக்குத்தல், சிரஸ்தாப ரோகம், பெருவிரணம், உள்மூலம், உள்ளுருக்கு வெள்ளை இவை போகும். சுக்கிலம் வளர்ச்சி அடையும்.
தவசு முருங்கை இலை:
வாத பீநிசம், உபஜிக்வாத ரோகம், தொந்த நோய், கபம், சுவாசம், சிறு இருமல் ஆகியவை நீங்கும்.
வெதுப்படக்கி இலை:
வெண்மையான பேதி, சிலேத்மக்கிராணி, தாபம், ரூட்சை, அள்ளுமாந்தம், வாதாதிக்கம், உட்சுரம், இரத்த தாதுவில் உண்டாகின்ற மலினம் ஆகியவற்றை போக்கும்.
பெரியாநங்கை இலை:
பித்த ரோகங்களும், மல பந்தமும் நீங்கும். இந்த இலை பலவித பஸ்பங்கள் செய்வதற்கும் பயன்படுகிறது.
சிறியாநங்கை இலை:
இந்த மூலிகை மனதை மயக்கும். வெங்காரத்தை பஸ்பமாக்கும். உடலில் அழகை உண்டாக்கும்.
பருத்தி இலை:
இலையையாவது, மொக்கையாவது அரைத்து அரை ஆழாக்கு பசும்பாலில் கரைத்து சாப்பிட்டால் சீழ்மேகம் முதலிய மேகங்களும், ரதத்த பித்த ரோகங்கமும், விரண சோபையும் நீங்கும்.
கூத்தங் குதம்பை இலை:
மூல ரோகம், சந்நிபாதம், மகா வாத ரோகம் ஆகியவற்றை நீக்கும். பித்த கோபத்தை விருத்தி செய்யும். மண்டூரத்தை செந்தூரஞ் செய்வதற்கும் உதவும்.
அரிவாள் மூக்குப்பச்சிலை:
ஆயுதங்களால் உண்டாகிற காயத்தை விரைவில் போக்கும். தவிர மகாவிஷத்தையும் உதிர கெடுதியால் பிறந்த சிரஸ்தாப ரோகத்தையும் விலக்கும்.
துத்தி இலை:
ஆமணக்கு நெய்யால் வதக்கி கட்டினால் மூல ரோகமும், கிருமி விரணமும் போகும். இதை எப்படி சாப்பிட்டாலும் சகல ரோகங்களும் நீங்கும்.
விழுதி இலை:
கரப்பான், சுவேத பிரமேகம், வித்திரிக்கட்டி, உடல் குத்தல், அக்கினி மந்தம், மலாசயக்கிருமி, விரோத மலம் ஆகியவற்றை போக்கும். விரோசனத்தில் உண்டாகும்.
கணப்பூண்டு இலை:
கணப்பூண்டின் இலையானது மேக நீரால் பிறந்த கட்டிகளை கரைக்கும். தேரை கணம், ஆமக்கணம், சிலேஷ்ம சுரங்கள் ஆகியவற்றை போக்கும்.
காரை இலை:
இரத்தக்கடுப்பு தீரும்.
சேம்பு இலை:
ஊர் சேம்பு இலைக்கு சுஷ்கமூலம் நீங்கும்.
பிடங்கு நாரி இலை:
செறியா மந்தமும், ஆரம்ப சகல கோவையும் போகும். சடராக்கினியும் புத்திக்கு தெளிவும் உண்டாகும்.
அவுரி இலை:
தாவர கந்தமூல விஷங்களும், வாத சுரம், காமியம், மாந்தம், சீதளம், சந்நிபாதம், கீல் வாதம், சர்ப்ப விஷம் இவற்றை நீக்கும். உடலுக்கு பொன் நிறத்தை தரும்.
குப்பைமேனி இலை:
தந்த மூலநோய், தீச்சுட்டப்புண், தாவர சங்கம விஷங்கள், வயிற்று வலி, வாத ரோகம், இரத்த மூலம், நமைச்சல், குத்தல், இரைப்பு, பீநிசம், கபாதிக்கம் ஆகியவற்றை நீக்கும்.
மிளகு தக்காளி இலை:
கசப்புள்ள மிளகு தக்காளி இலை, அக்கினி மந்தம், வீக்கம், சர்த்தி, பாதா சேஷபக வாதம், சுரம், சோம ரோகம், பாண்டு, விக்கல், திரிதோஷ நோய்கள், மேக சொறி, வெள்ளை, உட்சூடு இவற்றை நீக்கும். வெள்ளீயத்தை கட்டும். பலவிதமான சிந்தூரங்களுக்கும் உதவும்.
தும்பை இலை:
சர்ப்பகீட விஷங்கள், வாத நோய், தலைவலி, கபதோஷம், அக்கினி மந்தம், சிலேஷ்ம சந்நி இவற்றை நீக்கும். இந்த இலையை புளி விட்டு கடைந்து உணவோடு சாப்பிட்டால் பிரமேகம், நேத்திரப்புகை, கால்களில் அசதி, தாகம், சோம்பல் ஆகியவை நீங்கும்.
முள்ளங்கி இலை:
வாத கோபம், பித்த நோய், கிருமி ரோகம், மார்பு எரிச்சல் ஆகியவை உண்டாகும். வயிற்று நோய் நீங்கும்.
சுவற்று முள்ளங்கி இலை:
நீர்க்கட்டையும், மார்பு நோயையும், வாத சோப ரோகத்தையும் போக்கும்.
கறுப்பு வழுதுணை இலை:
நீர்க்கட்டையை போக்கும்.
புகையிலை:
வாய் வறட்சி, துர்ப்பலம், பித்தாதிக்கம், சுக்கில கோளாறு ஆகியவற்றை உண்டாக்கும். நல்ல மருந்தையும் முறிக்கும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum