Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இங்கிலாந்து ராணிக்கு இந்தியாவில் கட்டப்பட்ட நினைவுச் சின்னம்

Go down

இங்கிலாந்து ராணிக்கு இந்தியாவில் கட்டப்பட்ட நினைவுச் சின்னம் Empty இங்கிலாந்து ராணிக்கு இந்தியாவில் கட்டப்பட்ட நினைவுச் சின்னம்

Post by oviya Fri Aug 21, 2015 3:33 pm

இங்கிலாந்து ராணி விக்டோரியாவின் (1819 - 1901) நினைவாக மேற்கு வங்க மாநில தலைநகரான கொல்கத்தாவில், 1906 ம் ஆண்டில் துவங்கப்பட்டு 1921 ம் ஆண்டில் கட்டப்பட்டது மார்பில் கட்டடம்.
ஹூக்ளி நதிக்கரையில் உள்ள மைதானத்தில், இந்தோ - சரசெனிக் பாணியில் எழுப்பப்பட்ட ஒரு கட்டடக் கலை. இதை ஒட்டி ஜவஹர்லால் நேரு சாலை செல்கிறது.

விக்டோரியா நினைவு மஹாலில் மண்டபங்கள், வரலாற்று சம்பந்தமான பொருள்கள் அடங்கிய மியூசியம் மற்றும் அங்குள்ள தோட்டம் பார்க்க பரவசப்படுத்துவது.

இப்போது இது அருங்காட்சியகமாகவும் சுற்றுலாத் தலமாகவும் மேற்கு வங்க கலாச்சார அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த ஜார்ஜ் கர்ஸனால் கட்ட துவங்கப்பட்டது. ஆனால், இது கட்டி முடிக்கப்படுவதுக்குமுன் 1912ம் ஆண்டில் ஐந்தாம் ஜார்ஜால் கல்கத்தாவாக இருந்த இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு மாற்றப்பட்டது. இதுவே இது இந்தியாவின் தலைநகரில் அமையாமல் போனதுக்கு காரணம்.

இது கட்டப்பட்ட காலத்தில் இருந்ததைவிட சில பகுதிகள் சுதந்திரமடைந்த பிறகு சேர்க்கப்பட்டது.

இந்த மெமோரியலின் மத்தியில் உள்ள குவிமாடத்துள் 16 அடிகள் உயரமுள்ள விக்டொரியா தேவதையின் சிலை உள்ளது.

அந்த குவிமாடத்தைச் சுற்றிலும் கலை, கட்டடக்கலை, நீதி, அறக்கட்டளை, கற்றல், மதிநுட்பம், தாய்மை அகியவற்றை விளக்கும் உவமேயமான காட்சி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வடக்கு தாழ்வரத்தில் தாய்மையை விளக்கும் (ஒரு தாய் குழந்தைக்கு பால் கொடுக்கும்) சிலை தத்ரூபமாக உள்ளது.

மேலும் விக்டோரியா நினைவு மஹாலில் 25 கேலரிகள் உள்ளன. அரச கேலரி, தேசத் தலைவர்கள் கேலரி, ஓவிய காட்சியகம், மைய மண்டபம், சிற்ப கேலரி, ஆயுத மற்றும் அயுத கிடங்குகள் பற்றிய கேலரி, புதிய கேலரி, கல்கத்தா கேலரி என ஒவ்வொன்றுக்கும் ஒரு பெரிய அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

விக்டோரியாவின் மெமோரியலாக மட்டுமல்லாமல் அவர் குடும்பத்தை சேர்ந்த தாமஸ் டேனியல் (1749 -1840) மற்றும் அவருடைய மருமகன் வில்லியம் டேனியல் (1769 -1837) இவர்களை பற்றிய பொருள்களும் புத்தகங்களும் விக்டோரியாவை போலவே விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

அரிதான பழம்பொருட்கள், வேலைத் திட்டங்களின் படிவங்கள், உள்ளன. வாஷித் அலி ஷாவின் கதக் நடனம் பற்றிய குறிப்புகளும், தும்ரியில் இசை பற்றி ஷேக்ஸ்பியர் எழுதியதும், அரேபிய இரவுகள் புத்தகங்களும், ஒமர் கயாம் ரூபயட் படைப்புகளும் இன்னும் ஏராளமான புத்தகங்களும் நினைவுப் பொருள்களும் இடம்பெற்றுள்ளது.

கண்காட்சியாகவே திகழும் இந்த அருங்காட்சியகத்தோடு எதுவும் போட்டியிட முடியாத தனித்துவத்தை கொண்டுள்ளது.

1970-களில் கொல்கத்தாவை பற்றிய வரலாற்று குறிப்புகளும் இங்கு சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விக்டோரியா மெமோரியலின் வெளிப்பகுதியில் 64 ஏக்கர் பரப்பளவிலான தோட்டம் உள்ளது. இது 21 பேர் கொண்ட குழுவால் நிர்வகிக்கப்படுகிறது.

இந்த தோட்டத்தில் விக்டொரியா அவருடைய அரியாசனத்தில் அமர்ந்திருப்பது போன்ற வெண்கலச்சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அதில் அவர் அணிந்திருக்கும் மேலங்கியில் இந்திய நட்சத்திரம் உள்ளது.

மேலும் ஹாஸ்டிங், காரன்வாலிஸ், க்ளைவ், வெல்லெஸ்லி, டல்ஹவுஸி, பெண்டிங், கர்ஸன், மற்றும் அக்காலத்திய இந்தியாவின் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் சிலைகளும் ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்டுள்ளது அர்த்தமுள்ளதாக உள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum