Top posting users this month
No user |
Similar topics
சென்னையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடக்க வாய்ப்பு! இங்கிலாந்து நிறுவனம் தகவல்
Page 1 of 1

உலக ஆபத்து பகுப்பாய்வு நிறுவனம் ஒன்று சென்னையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் ஆபத்து உள்ளதாக வெளியிட்ட புதிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் ‘வெரிஸ்க் மேபிள் கிராப்ட்’ என்று ஒரு உலக ஆபத்து பகுப்பாய்வு நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனம், உலகமெங்கும் தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கான ஆபத்து உள்ள நகரங்களை ஆராய்ந்து வங்கிகளுக்கும், காப்பீடு நிறுவனங்களுக்கும் தகவல்கள் கூறுவதில் பிரபலமானது ஆகும்.
தற்போது இந்த நிறுவனம் கடந்த 6 ஆண்டுகளாக உலகமெங்கும் நடந்து வந்த தீவிரவாத தாக்குதல்களின் அடிப்படையில், 1,300 நகரங்களில் தீவிரவாத தாக்குதல் ஆபத்து நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து கண்டறிந்துள்ளது.
இந்நிலையில், தீவிரவாத தாக்குதலின் தீவிரத்தின் அடிப்படையில், அதிக ஆபத்து, மிதமான ஆபத்து, லேசான ஆபத்து கொண்ட நகரங்களை இந்த அமைப்பு இப்போது பட்டியலிட்டுள்ளது.
அவற்றில் 64 நகரங்கள் தீவிரவாத தாக்குதல் ஆபத்து மிக அதிக வாய்ப்புள்ள நகரங்களாக கூறப்பட்டுள்ளன.
ஈராக் தலைநகரமான பாக்தாத், இப்போதும் உலகிலேயே தீவிரவாத தாக்குதல்கள் நடத்தும் ஆபத்து மிக அதிகம் உள்ள நகர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
தொடர்ந்து அந்த நாட்டின் மொசூல், அல் ரமாடி, பாகுபா, கிர்குக் நகரங்கள் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இந்தியாவை பொறுத்த வரை, மணிப்பூர் மாநிலத்தின் தலைநகரமான இம்பால், காஷ்மீரின் கோடை தலைநகரான ஸ்ரீநகர் ஆகிய இரு நகரங்களும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் ஆபத்து மிக அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலில் முறையே 32வது இடத்திலும், 49-வது இடத்திலும் உள்ளன.
தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்கு மிதமான வாய்ப்புள்ள நகரங்களில் பட்டியலில் சென்னை 176வது இடத்தில் உள்ளது.
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு குறைவான வாய்ப்புள்ள நகரங்கள் பட்டியலில் மும்பை, டெல்லி, கொல்கத்தா இடம் பிடித்துள்ளன.
இவற்றில் மும்பை 298-வது, டெல்லி 447-வது, கொல்கத்தா 212-வது இடங்களில் உள்ளன.
இது தொடர்பாக ஆய்வு நடத்திய அமைப்பின் இந்திய பிரிவை சேர்ந்த அரவிந்த் ராமகிருஷ்ணன் கூறுகையில், இம்பால், ஸ்ரீநகர் ஆகிய நகரங்களில் வணிக நிறுவனங்களை குறிவைத்து தாக்குதல் அமையாது. பாதுகாப்பு படையினரை குறிவைத்துத்தான் தாக்குதல்கள் நடத்தும் வாய்ப்பு உள்ளது.
இந்தியாவில் எல்லை கடந்த தாக்குதல் ஆபத்து இல்லை. இந்திய முஜாகிதீன் போன்ற உள்நாட்டு தீவிரவாதிகளால்தான் அச்சுறுத்தல் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்ய தீர்மானத்தை ஆதரிக்கும் சிங்கள ராவய
» பருவநிலை மாற்றத்தால் சென்னையில் பேய் மழை: - இயற்கை வழித்தடங்களை மறைத்து கட்டிடங்களை கட்டி உள்ளனர். விஞ்ஞானிகள் தகவல்
» அம்பேத்கரின் பேரன் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: பரபரப்பு தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum