Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கூலிங் கிளாஸுடன் சசிபெருமாளின் பிணத்தை தூக்கிய வைகோ விளம்பர விரும்பி: நாஞ்சில் சம்பத்

Go down

கூலிங் கிளாஸுடன் சசிபெருமாளின் பிணத்தை தூக்கிய வைகோ விளம்பர விரும்பி: நாஞ்சில் சம்பத் Empty கூலிங் கிளாஸுடன் சசிபெருமாளின் பிணத்தை தூக்கிய வைகோ விளம்பர விரும்பி: நாஞ்சில் சம்பத்

Post by oviya Tue Aug 11, 2015 3:13 pm

அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் மதுரை ஜீவா நகரில் நடந்த அதிமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
மதுரை ஜீவா நகரில் அதிமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது பேசிய அவர், அர்த்த ராத்திரியில் சாட்சி இல்லாமல் பிறந்தவர்கள் எல்லாம் அடுத்த ஆட்சி அமைப்போம் என்கிறார்கள்.

திண்டிவனத்தை தாண்டி வர முடியாதவர்கள் எல்லாம் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்.

மதுவை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி பல ஆண்டுகளாக தமிழகத்தை நாசமாக்கியவர் கருணாநிதி.

அந்த குற்றவாளியுடன் கலிங்கப்பட்டி போராளி ஒருவர் சேர்ந்துள்ளார். இதில் கொடுமை என்னவென்றால் இந்தப் போராளி கலிங்கப்பட்டியில் அடித்து நொறுக்கிய மதுக்கடையின் பங்குதாரர் அவரது தம்பி ரவிச்சந்திரன்.

கலிங்கப்பட்டியில் நடந்த கலவரம் வைகோவால் திட்டமிடப்பட்டது. இல்லையென்றால் சென்னை, மதுரை என்று பல மாவட்ட செயலாளர்கள் அங்கு வரக் காரணம் என்ன?

கூலிங்க் கிளாஸ் போட்டு சசிபெருமாளின் பிணத்தை தூக்கும்போதே எந்தளவுக்கு வைகோ விளம்பரத்தை விரும்புகிறார் என்பது தெரிந்து விடுகிறது.

மூன்று மனைவிகள் கட்டிய சசிபெருமாளை எப்படி காந்தியவாதி என்று அழைக்க முடியும்.

அறவழிப்போராட்டம் நடத்திய மகாத்மாகாந்தி, செல்போன் டவரில் ஏறச்சொன்னாரா?

மதுவின் வாடையே என்னவென்று தெரியாத விஜயகாந்த், ஐம்பது பேரை வைத்துக்கொண்டு மனித சங்கிலி நடத்துகிறார்.

மதுவை ஒழிக்க முடியாது. பல மாநிலங்களில் வீட்டிற்கே வந்து மது சப்ளை செய்கிறார்கள். அதனால் மக்கள்தான் மாற வேண்டும்.

மேலும், தமிழக அரசே மதுவிலக்கு பிரச்சாரம் செய்ய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது என்று பேசியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum