Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கோடீஸ்வரரை மணப்பது எப்படி? இணையத்தில் வைரலாய் பரவிவரும் இளம்பெண்ணின் கேள்வி

Go down

கோடீஸ்வரரை மணப்பது எப்படி? இணையத்தில் வைரலாய் பரவிவரும் இளம்பெண்ணின் கேள்வி Empty கோடீஸ்வரரை மணப்பது எப்படி? இணையத்தில் வைரலாய் பரவிவரும் இளம்பெண்ணின் கேள்வி

Post by oviya Sun Aug 02, 2015 3:54 pm

கோடீஸ்வரரை மணப்பது எப்படி என்ற இளம்பெண்ணின் கேள்வி ஒன்றுக்கு ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி பதில் அளித்ததாக இணையத்தில் ஒரு கேள்வி-பதில் உலா வந்து கொண்டிருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் அந்த கேள்வி-பதில், உண்மையில் நடந்த சம்பவமா என்பது பற்றி எந்தவிதமான உறுதியான தகவலும் இல்லை.

கோடீஸ்வரரை திருமணம் செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும்? எனும் தலைப்பிலான அந்த கேள்வியில், என் பெயர் பூஜா சோகன், எனக்கு 25 வயது ஆகப்போகிறது.

இங்கு சொல்ல இருப்பதை நேர்மையாக சொல்கிறேன். நான் அழகான பெண்.

நான் ஆண்டுக்கு 100 கோடிக்கும் மேல் சம்பாதிக்கும் ஒருவரை நான் மணந்து கொள்ள விரும்புகிறேன்.

இது போன்ற ஒருவரை மணந்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?

பணக்கார இளைஞர்களை எங்கே சந்திக்கலாம், பணக்காரர்களின் மனைவிகள் பெரும்பாலும் அழகாக இல்லாமல் இருப்பது ஏன்?

கோடீஸ்வரர்கள் காதலியையும், மனைவியையும் எப்படி தீர்மானிக்கின்றனர்? என்று கேட்டிருந்தார்.

இந்த கேள்விக்கு முகேஷ் அம்பானி அளித்ததாக கூறப்படும் பதிலில், உங்கள் கேள்வியை ஆர்வத்துடன் படித்தேன். ஒரு முதலீட்டாளர் பார்வையில் இதற்கு பதில் அளிக்கிறேன்.

அதன் பிறகு, உங்கள் நிபந்தனையை நான் பூர்த்தி செய்தாலும் என்னால் உங்களை மணந்து கொள்ள முடியாது.

ஏனெனில், நீங்கள் அழகுக்கு பணத்தை மாற்றிக்கொள்ள நினைத்தாலும் அதில் உள்ள சிக்கல் என்ன என்றால் உங்கள் அழகு தேய்மான ரகத்தை சேர்ந்தது.

ஆனால், எனது சொத்து வளரக்கூடியது. அதிலும் உங்கள் அழகு ஆண்டுக்கு ஆண்டு குறையும் என்றால், எனது சொத்து வளர்ந்து கொண்டே இருக்கும்.

மேலும் 10 ஆண்டுகளில் உங்கள் அழகுக்கு மோசமான மதிப்பே இருக்கும், 100 கோடி வருமானம் உள்ள யாரும் உங்களை மணந்து கொள்ளும் அளவுக்கு முட்டாள் அல்ல.

அதைவிட ஏன் நீங்கள் ஆண்டுக்கு 100 கோடி சம்பாதிக்க கூடிவராக மாறக்கூடாது, கோடீஸ்வரரை மணப்பதை விட அது சாத்தியம் என கூறப்பட்டுள்ளது.

மேலும், இது முகேஷ் அம்பானியின் பதில் அல்ல என்றும் அமெரிக்காவின் ஜேபி மோர்கன் நிறுவன தலைவரின் பதில் என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum