Top posting users this month
No user |
Similar topics
ஆலு பனீர் கட்லட்
Page 1 of 1
ஆலு பனீர் கட்லட்
கேரட் -- 50 கிராம் (துருவியது)
பச்சை பட்டாணி -- 50 கிராம் (வேக வைத்தது)
உருளைக்கிழங்கு -- 100 கிராம் (வேகவைத்து மசித்தது)
பனீர் -- 200கிராம் (துருவியது)
மிளகாய் -- 5
கொத்தமல்லி -- ஒரு கைப்பிடி
புதினா -- ஒரு கைப்பிடி
சீஸ் -- 5 ஸ்பூன் (துருவியது)
பிரட் -- 5 ஸ்லைஸ்
தாளிக்க:
கடுகு -- சிறிதளவு
சிறிது எண்ணையை வாணலியில் காய வைத்து காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும்.
கேரட்டை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். இதனுடன் பச்சை பட்டாணி, உருளை கிழங்கு சேர்த்து பின் துருவிய பனீர் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
மிளகாய்,கொத்தமல்லியை நன்றாக அரைக்கவும்.
இந்த அரைத்த மசாலாவையும் காய்கறிகலவையில் ஊற்றி வதக்கவும்.
நன்றாக கிளறியபின் புதினா தூவவும்.
அடுப்பை நிறுத்தி கலவையை ஆற விடவும்.
சூடு ஆறிய பின் சீஸ் துருவலை போட்டு கையால் மசித்து சிறிய சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.
பிரட் ஸ்லைஸை ஓரத்தில் கட் செய்து நீரில் நனைத்து நீரைப் பிழியவும்.
பின் உருண்டைகளை உள்ளே வைத்து பிரட்டை உருண்டைகளாக பிடிக்கவும்.
இவற்றை எண்ணைய் போட்டு பொரித்தெடுக்கவும்.
தொட்டுக் கொள்ள புதினா சட்னி / சாஸ் சேர்க்கவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum