Top posting users this month
No user |
Similar topics
முந்திரி பருப்பு கேக்
Page 1 of 1
முந்திரி பருப்பு கேக்
மைதா மாவு - 200 கிராம்
சர்க்கரை - 40 கிராம்
வெண்ணெய் - 120 கிராம்
முட்டை - ஒன்று
பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி
உப்பு - அரை தேக்கரண்டி
பால் - 2 மேசைக்கரண்டி
<b>டாப்பிங் செய்ய தேவையானவை:</b>
வெண்ணெய் - 65 கிராம்
சர்க்கரை 50 கிராம்
பொடித்த முந்திரி - 60 கிராம்
வெனிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி
பால் - ஒரு மேசைக்கரண்டி
வெண்ணையையும் சர்க்கரையையும் நன்றாகக் குழைக்கவும்.
முட்டைகளை நன்றாக அடிக்கவும். அடித்த முட்டையை சிறிது சிறிதாக வெண்ணெய் கலந்து சர்க்கரை கலவையில் ஊற்றி தொடர்ந்து அடிக்கவும்.
பிறகு எசன்ஸ், கலர் சேர்க்கவும். பேகிங் பவுடரையும், மைதா மாவையும் இரு முறை சலித்த பிறகு அதையும் சேர்க்கவும்.
பிறகு இந்த கலவையில் சிறிது பால் சேர்த்து தளர்த்தியாக கலக்கவும். நிரம்ப தளர்த்தியாக இருக்கக் கூடாது.
9 அங்குல கேக் பேக் செய்யும் தட்டில் நெய் தடவி மாவு தூவிக் கொள்ளவும்.
கலவையை தட்டில் சமமாகப் போடவும்.
பிறகு கேக்கின் மேலே கீழே கொடுத்துள்ளபடி "டாப்பிங்" செய்யவும்.
டாப்பிங் செய்யும் முறை
முதலில் வெண்ணையை உருக்கவும்.
சர்க்கரை, முந்திரி (பொடித்தது), எசன்ஸ், பால் சேர்க்கவும்.
ஒரு கொதி வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கிக் கொள்ளவும்.
ஆறின பிறகு அதை பேக் ஆகாத கேக்கின் மேல் மெதுவாக தடவி, பிறகு 400 டிகிரி F சூட்டில் சுமார் 40 நிமிடம் வரை கேக்கை பேக் செய்யவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum