Top posting users this month
No user |
Similar topics
மாங்காய் சேமியா
Page 1 of 1
மாங்காய் சேமியா
சேமியா - முக்கால் கப்
மாங்காய் - சிறியது ஒன்று (அ) ஒரு கையளவு துருவிய மாங்காய்
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
உப்பு
பச்சை மிளகாய் - ஒன்று
கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி + 2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - ஒரு மேசைக்கரண்டி (விரும்பினால்)
வேர்கடலை / முந்திரி - சிறிது (விரும்பினால்)
சேமியாவை 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சிவக்க வறுக்கவும். ஏற்கனவே வறுத்த சேமியா என்றால் லேசாக பிரட்டி எடுத்தால் போதுமானது. எண்ணெயில் பிரட்டி எடுத்தால் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் வரும்.
முக்கால் கப் நீரை கொதிக்க வைத்து உப்பு சேர்த்து சேமியாவில் ஊற்றி சிறுந்தீயில் குழைந்து போகாமல் வேக வைத்து எடுத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
இதில் துருவிய மாங்காய், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். மாங்காயின் புளிப்புக்கு ஏற்றபடி மாங்காயின் அளவு, தூள்களின் அளவை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.
இதில் தூள் வகை எல்லாம் சேர்த்து வதக்கவும். மாங்காய்க்கு தேவையான உப்பை இப்போது சேர்க்கவும்.
தூள் வாசம் போய் எண்ணெய் பிரியும் போது வேக வைத்த சேமியா சேர்த்து நன்றாக பிரட்டி எடுக்கவும்.
விரும்பினால் தேங்காய் துருவல் தூவலாம். வேர்கடலை அல்லது முந்திரியை வறுத்து தூவலாம். சுவையான மாங்காய் சேமியா தயார். உருளை வறுவலோடு சாப்பிட சுவையான உணவு. இதே போல் சேமியாவுக்கு பதிலாக சாதம் வேக வைத்தும் சேர்க்கலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum