Top posting users this month
No user |
Similar topics
பனீர் வெங்காயக்கறி
Page 1 of 1
பனீர் வெங்காயக்கறி
பனீர் கட்டி - கால் கிலோ
வெங்காயம் - கால் கிலோ
பச்சைமிளகாய் - இரண்டு
மிளகாய்தூள் - அரைதேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைதேக்கரண்டி
தனியா - இரண்டு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு பிடி
எண்ணெய் - கால் கோப்பை
உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
பனீரை கைகளால் உதிர்த்துக் கொள்ளவும்.
வெங்காயம் பச்சைமிளகாயை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
தனியா, மிளகு, சீரகத்தை வறுத்து தூள் செய்து உப்புத்தூளைச் சேர்த்து கலக்கி வைக்கவும்.
ஒரு வாயகன்ற சட்டியில் எண்ணெயைக் காய வைத்து கடுகு, கறிவேப்பிலையைப் போட்டு பொரியவிடவும்.
பிறகு வெங்காயம் பச்சைமிளகாயைப் போட்டு வதக்கவும். தொடர்ந்து மிளகாய்தூள், மஞ்சள்தூளைப் போட்டு நன்கு வதக்கி விட்டு பன்னீரைக் கொட்டி கிளறவும்.
பிறகு தயாரித்து வைத்துள்ள தூளைக் கொட்டி நன்கு கிளறிவிடவும்.
எல்லாவற்றையும் சேர்த்து வதக்கி பச்சைவாசனை நீங்கியவுடன் கொத்தமல்லியைப் போட்டு கிளறி விட்டு இறக்கி விடவும்.
இந்த சுவையான பனீர் வெங்காயக்கறியை சப்பாத்தி அல்லது பூரியுடன் சூடாக பரிமாறவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum