Top posting users this month
No user |
Similar topics
பிரசன்னவை மீண்டும் விசாரணைக்கு அழைப்பு! சுசிலின் வேண்டுகோள் நிராகரிப்பு
Page 1 of 1

மேல் மாகாண சபை முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அவரது மனைவி ஆகியோரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று நிதி மோஷடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மீதொடமுல்லை காணி கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட நிதி மோஷடி தொடர்பில் வாக்குமூலம் பெறவே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னரும் முதலமைச்சரும் அவரது மனைவியும் இரு முறைகள் இப்பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஐ.ம.சு.மு.யில் வேட்பாளராக களமிறங்கியுள்ளதால் அவரது விசாரணையை ஒத்திவைக்குமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் அக்கட்சியின் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
தேர்தல்கள் ஆணையாளர் இது தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்திருந்தும், நிதி மோஷடி தொடர்பிலான பொலிஸ் பிரிவு கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இந்த விசாரணையை உடன் நடாத்த வேண்டும் என அனுமதி பெற்றுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
பிரசன்ன ரணதுங்க நிதிக்குற்றவியல் விசாரணைப் பிரிவில் ஆஜர்
மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.
காணி மோசடி சம்பவமொன்று தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பிரசன்னவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
பிரசன்ன ரணதுங்கவின் மனைவியிடமும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
பிரசன்னவின் மனைவியும் இன்றைய தினம் நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவில் முன்னிலையாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பிரசன்னவிடம் விசாரணை நடத்தப்படுகின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மீண்டும் விசாரணைக்கு வரும் மகிந்த மனைவியின் வங்கி கணக்குகள்
» தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் மற்றுமொரு வரவு செலவுத்திட்டம்! கோடீஸ்வரன் பா.உ
» எதிர்க்கட்சியினரின் ஆட்சேபனை சபாநாயகரினால் நிராகரிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum