Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கீமா வெந்தய கீரை

Go down

கீமா வெந்தய கீரை                Empty கீமா வெந்தய கீரை

Post by oviya Sat Jul 18, 2015 12:43 pm



கீமா (கொத்து கறி) - 100 கிராம்
வெந்தயக்கீரை - ஒரு கட்டு
எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
டால்டா - ஒரு தேக்கரண்டி
பட்டை - ஒரு சிறிய துண்டு
வெங்காயம் - ஒன்று (பெரியது)
தக்காளி - ஒன்று (பெரியது)
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - ஒன்று
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி - இரண்டு மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - முக்கால் தேக்கரண்டி
கடலை பருப்பு - கால் ஆழாக்கு
Ads by Block The AdsAd Options



வெந்தய கீரையை ஆய்ந்து கழுவி தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். கீமாவை கழுவி தண்ணீரை வடித்து வைக்கவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் நறுக்கி வைக்கவும். கடலை பருப்பை ஊற வைக்கவும்.


ஊற வைத்திருக்கும் கடலை பருப்பை எடுத்து குக்கரில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.


வாணலியில் எண்ணெய் மற்றும் டால்டாவை ஊற்றி காய்ந்ததும் பட்டை துண்டுகளை போட்டு பொரிய விடவும்.


நறுக்கின வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி ஆகியவற்றை போட்டு வதக்கவும்.


அதன் பிறகு வெந்தயக் கீரை, கீமா, தக்காளியை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.


நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி விடவும்.


எல்லாம் வெந்து மசாலா வாடை போகும் வரை 7 நிமிடங்கள் தீயை மிதமாக வைத்து வேக விடவும்.


வேக வைத்துள்ள கடலை பருப்பை எடுத்து கரண்டியால் நன்கு மசித்து விடவும்.


மசித்த கடலைபருப்பை கீரை கலவையுடன் சேர்த்து கொதிக்க விடவும். தேவைப்பட்டால் தேங்காய் பால் சேர்க்கவும்.


கம கம மணமும் சுவையும் நிறைந்த கீமா வெந்தய கீரை ரெடி.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum