Top posting users this month
No user |
Similar topics
கிளி.உருத்திரபுரம் பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு: தட்டிக் கேட்டவரை தாக்க முயற்சி
Page 1 of 1

கிளிநொச்சி உருத்திரபுரம் நீவில் பகுதியில் சட்ட விரோத மண் அகழ்வு தொடர்ச்சியாக நடைபெறுவதுடன், ஊடகங்கள் வாயிலாக பலமுறை தெரியப்படுத்தியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலைமையில், உருத்திரபுரம் பெரும்போக உத்தியோகத்தர் திரு.சுந்தரமூர்த்தி என்பவர் காணி எல்லை பிரச்சினை சம்பந்தமாக அப்பகுதிக்கு சக பணியாளர்கள் மூவருடன், நீவில் கமக்கார அமைப்பு செயளாளர், உபதலைவர் ஆகியோரை அழைத்துச் சென்ற சந்தர்ப்பத்தில் சட்ட விரோத மண் அகழ்வில் ஈடுபட்ட 4 உழவியந்திரங்களை அடையாளம் கண்டு கொண்டார்.
அதில் ஒரு உழவியந்திரத்தின் அனுமதிப் பத்திரத்தை பறிமுதல் செய்ததுடன்,இன்னொரு உழவியந்திரத்தில் ஏற்றப்பட்டிருந்த மணலையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த உழவியந்திர உரிமையாளர்கள் குறித்த குழுவினரை தாக்கும் திட்டத்துடன், ஒன்று கூடியுள்ளனர்,அங்குள்ள நிலைமையை உணர்ந்த குறித்த குழுவினர் அங்கிருந்து விலகி அலுவலகம் சென்று விட்டனர்.
எனினும், அதே நாள் மாலை வேளையில் கப்ருக்க சங்கத்தின் உறுப்பினர்களுக்கான தென்னங்கன்று விநியோகத்தில் ஈடுபட்டிருந்த நீவில் பகுதி கமக்கார அமைப்பு செயளாளரை குழுவாக வந்த உழவியந்திர உரிமையாளர்கள் தாக்க முற்பட்டதுடன், தகாத வார்த்தைகளினால் திட்டியதுடன், உயிர் அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்.
ஆயினும், உருத்திரபுரம் வடக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் மற்றும் அங்கிருந்தவர்களின் தலையீட்டினால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக கமநல சேவை நிலையத்திற்கும், கிராம சேவையாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» விசுவமடு பகுதியில் மர்மப்பொருள் இருப்பதாக திடீர் அகழ்வு!
» பா.உறுப்பினர் சிறீரனின் அனுசரணையுடன் கிளி.காஞ்சிபுரம் மாணவர்களுக்கு பேருந்து சேவை
» இந்தியாவில் இலங்கையரைக் கொண்டு ஒபாமாவை தாக்க பயங்கரவாதிகள் சதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum