Top posting users this month
No user |
Similar topics
ரஜினிகாந்தின் மனைவி மீது பொலிசார் வழக்கு பதிவு
Page 1 of 1

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் மீது பெங்களூரு பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லதா ரஜினிகாந்த் ஊடகங்கள் மீது கடுமையான உத்தரவை பிறப்பிக்கும் வகையில் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், போலி ஆவணங்களை சமர்ப்பித்ததாகக் கூறி அவருக்கு எதிராக F.I.R செய்யப்பட்டுள்ளது.
'கோச்சடையான்' படத்தை தயாரிப்பதற்காக 'ஆட் பீரோ' நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹார் என்பவரிடம் படத்தின் இணை தயாரிப்பாளர் முரளி மனோகர் என்பவர் ரூ.14.9 கோடி கடன் பெற்றுள்ளார்.
இதற்கு முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாத கையொப்பம் போட்டுள்ளார்.
இந்நிலையில் அபிர்சந்த் நஹார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முரளி மீதும், லதா ரஜினிகாந்த் மீதும் நிதி மோசடி புகார் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், லதா ரஜினிகாந்த், ' Publishers and Broadcast Welfare Association of India' என்ற செய்தி நிறுவனத்தின் பெயரில் அறிக்கை வெளியிட்டு 'ஆட் பீரோ' நிறுவனத்துடனான பிரச்சினை தொடர்பாக செய்தி வெளியிட 76 ஊடகங்களுக்கு தடை வாங்கினார்.
ஆனால், அந்த செய்தி நிறுவனத்தின் உண்மைத் தன்மை குறித்து பெங்களூரு நகர காவல்துறை ஆணையர் விசாரணை நடத்தியதில் அந்த அமைப்பு பெங்களூருவில் இருப்பதாக தெரியவில்லை என்றும் அந்த அமைப்புக்கும் பெங்களூரு பிரஸ்கிளப்புக்கும் இடையே தொடர்பில்லை என்றும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பெங்களூரு பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த யூன் 9ம் திகதி பிறப்பித்த உத்தரவின்பேரில், தற்போது போலி ஆவணத்தை சமர்பித்ததாக கூறி லதா ரஜினிகாந்திற்கு எதிராக பெங்களூரு பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கர்ப்பமாக இருக்கும் என் மீது நாய்களை ஏவிவிட்டார்: முன்னாள் சட்டமந்திரி மீது மனைவி புகார்
» கோத்தபாய மீது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இரண்டுமணி நேரமாக விசாரணை: வாக்குமூலம் பதிவு
» குற்றவாளியை ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய பொலிசார் மீது வழக்குப்பதிவு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum