Top posting users this month
No user |
Similar topics
கோத்தபாய மீது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இரண்டுமணி நேரமாக விசாரணை: வாக்குமூலம் பதிவு
Page 1 of 1

இராணுவப் புரட்சிக்கு முயற்சித்தமை, இரகசிய ஆயுதக் களஞ்சியசாலை நடத்தியமை, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்ட விசாரணை தற்போது வரை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் எனினும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை காவல்துறை ஊடகப் பிரிவு இதுவரை வெளியிடவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவப் புரட்சிக்கு முயற்சிகளை மேற்கொண்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரரும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷ ஆகிய இருவரையும் விசாரணை செய்வதற்கான ஆலோசனையை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் இருந்து பெறுவதற்கு காத்திருப்பதாக காவல்துறை நேற்று அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தற்போது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் அதிகமாக இந்த விசாரணை இடம்பெற்று வருவதாக கொழும்புத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இரண்டாம் இணைப்பு
வாக்குமூலம் பதிவு
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் இன்று சிஐடியினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
காலி துறைமுகத்தில் கப்பலுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட எவெட்ன்ட் காட் தனியார் பாதுகாப்பு பிரிவின் ஆயுதங்கள் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மீட்கப்பட்ட ரத்னா லங்கா பாதுகாப்பு பிரிவுக்கான ஆயுதங்கள் போன்றவை தொடர்பிலேயே இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாகவே கோத்தபாயவிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அர்ஜுன மகேந்திரனிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை
» பசில் மீதும் விசாரணை! லியனகே இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்! அடுத்த வாரம் 7 பேர் மீது விசாரணை!
» நாமலிடம் விரைவில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum