Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சஜின்வாஸ் 5 கோடி ரூபா நட்டஈடு கோரி அடிப்படை உரிமை மீறல் மனு

Go down

சஜின்வாஸ் 5 கோடி ரூபா நட்டஈடு கோரி அடிப்படை உரிமை மீறல் மனு Empty சஜின்வாஸ் 5 கோடி ரூபா நட்டஈடு கோரி அடிப்படை உரிமை மீறல் மனு

Post by oviya Thu Jun 11, 2015 3:00 pm

நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன ஐந்து கோடி ரூபா நட்ட ஈடு கோரி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை இன்று தாக்கல் செய்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் தம்மை சிறையில் தடுத்து வைத்திருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனால் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் இதற்கு நட்ட ஈடாக ஐந்து கோடி ரூபா வழங்கப்பட வேண்டுமெனவும் சட்டத்தரணி ஊடாக உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபர், குற்ற விசாரணைப் பிரிவு, ஜனாதிபதி செயலக போக்குவரத்துப் பிரிவு பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போது ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக சஜின் வாஸ் குணவர்தன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் வாகனங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படவில்லை எனவும் அனைத்து வாகனங்களும் உரிய முறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சஜின் வாஸ் குணவர்தன, சட்டத்தரணி ஏ.சீ.எஸ். தேவபுர ஊடாக நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை எனவும் சஜின்வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum