Top posting users this month
No user |
Similar topics
மாயமான கடலோர காவல்படை விமானம்..3 விமானிகளின் கதி என்ன? தீவிர தேடுதல் வேட்டை!
Page 1 of 1

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற கடலோர காவல்படை ரோந்து விமானம் நாகை அருகே கடலில் மூழ்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்தியா முழுதும் கடலோர மாநிலங்களில் ஆபரேஷன் ஆம்லா எனப்படும் தீவிரவாத ஊடுருவல் தடுப்பு ஒத்திகை ஆண்டுக்கு இருமுறை நடக்கிறது.
இந்நிலையில், இந்த ஒத்திகை நேற்று காலை 6 மணிக்கு தொடங்கி இன்று மாலை 6 மணிக்கு முடிவடைவதாக இருந்தது.
சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் இருந்து புதுச்சேரி வரை ரோந்து சென்று வர சென்னையில் இருந்து டார்னியர் என்ற சிறிய ரக விமானத்தில் 3 விமானிகள் புறப்பட்டுச் சென்றனர்.
இந்நிலையில், திங்கட்கிழமை இரவு 9.23 மணி வரை சென்னை கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்த அந்த விமானம், அதன்பிறகு திடீரென தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
தொடர்பு துண்டிக்கப்பட்டதற்கு முன் காரைக்காலிலிருந்து 32 கடல் மைல் தூரத்திலும், சிதம்பரத்திலிருந்து 16 கடல் மைல் தூரத்திலும் விமானம் பறந்து கொண்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதையடுத்து கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான விமானங்கள் மற்றும் கப்பல்கள் தேடுதல் வேட்டையில் தீவிரமாக இறங்கின. விமானத்தில் இருந்த 3 பேர் கதி என்ன என்றும் தெரியவில்லை.
விமானிகளை உயிருடன் மீட்கும் பணியில் கடலோர காவல்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய குட்டி விமானத்தில் ஏடிஎஸ்பி ரேடார் கருவி இல்லாததால் விமானத்தின் நிலை குறித்து அறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நேற்றிரவு வரை நடந்த தேடுதல் வேட்டையில் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.
கடலூர் சோனாங்குப்பத்தைச் சேர்ந்த மீனவர் முகேஷ், என்பவர் திங்கட்கிழமையன்று இரவு, புதுச்சேரி அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, கடலில் பெரிய தீப்பிழம்பு விழுந்ததை, பார்த்ததாக சக மீனவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து புதுச்சேரி இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள், தங்களது அலுவலகத்தில் அவரை வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை துவங்கி, நாகை மாவட்டம் வேதாரண்யம் வரை 14,000 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள அலையாத்தி காடுகளில் விமானம் விழுந்திருக்கலாம் என்று முத்துப்பேட்டை ரேஞ்சர் அயூப்கான் தலைமையில் வனத்துறையினர் அலையாத்தி காடுகளுக்குள் சென்று தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனிடையே விமானம் மாயமானதை அடுத்து ஆபரேஷன் ஆம்லாவை ஒத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மீண்டும் ஆபரேஷன் ஆம்லா வரும் 15 மற்றும் 16ம் திகதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மாயமான கடலோர காவல் படை விமானம்: கடலுக்கு கீழே 850 மீற்றர் ஆழத்தில் கண்டுபிடிப்பு
» பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விட்ட நபர்! பொலிசார் தீவிர தேடுதல்
» கீழே விழுந்து நொறுங்கிய விமானப்படை விமானம்: விமானிகளின் கதி என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum