Top posting users this month
No user |
Similar topics
10ம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியை ஓட்டம் பிடித்த விவகாரம்: பொலிசார் தீவிர தேடுதல் வேட்டை
Page 1 of 1

பத்தாம் வகுப்பு மாணவனை காதலித்து அவனுடன் சேர்ந்து தப்பியோடி தற்போது தலைமறைவாகியுள்ள ஆசிரியையை கைது செய்ய பொலிசார் தீவிர தேடுதலில் இறங்கியுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கருப்பன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்த சந்திரகுமார், ஒடிசா மாநிலத்தில் உள்ள மத்திய பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார்.
இவரது 16 வயது மகன் சிவசுப்பிரமணியன் தென்காசி இலத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்நிலையில், கடந்த 31ம் திகதி, வீட்டை விட்டு சென்ற அவன் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து கடையநல்லூர் பொலிசில் அவனது தாயார் மாரியம்மாள் புகார் செய்தார்.
பொலிசார் வழக்கு பதிவு செய்து மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டபோது, அந்த மாணவன், ஆசிரியை ஒருவருடன் இருப்பது போன்ற படம் வாட்ஸ்அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த ஆசிரியை குறித்து விசாரித்தபோது அவர், செங்கோட்டை காலாங்கரை சங்கர சுப்பிரமணியன் தெருவைச்சேர்ந்த கேசரி மகள் கோதைலட்சுமி என்பதும், அவர் அந்த மாணவன் படித்து வந்த பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், அவரும் கடந்த 31ம் திகதி முதல் காணவில்லை என்று கோதைலட்சுமியின் தந்தை செங்கோட்டை பொலிசில் புகார் செய்துள்ளார்.
பின்னர் நடந்த விசாரணையில் அந்த மாணவனுடன் ஆசிரியை கோதைலட்சுமி ஓட்டம் பிடித்தது தெரியவந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கோதைலட்சுமியும், அந்த மாணவனும் நெருங்கி பழகியுள்ளனர்.
இந்த காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்தால் தங்களை பிரித்து விடுவார்களோ என்று எண்ணிய அவர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
தற்போது மாயமான இருவரும் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. அவர்களது செல்போனை பொலிசார் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனிடையே மாணவன் கொண்டு சென்ற ஏ.டி.எம் கார்டில் பணம் எடுத்தால், அதை வைத்து இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க திட்டமிட்டுள்ளனர்.
மேலும், பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி 2 பேரையும் தேடும் பணியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விட்ட நபர்! பொலிசார் தீவிர தேடுதல்
» 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவிகிதத்தில் முதலிடம் பிடித்த துபாய்
» செம்மரக் கடத்தலில் சிக்கிய நடிகை: தீவிர தேடுதல் வேட்டையில் பொலிசார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum