Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தென் சீனக்கடல் விவகாரத்தில் சீனா பக்கம் சாய்கிறதா இலங்கை?

Go down

தென் சீனக்கடல் விவகாரத்தில் சீனா பக்கம் சாய்கிறதா இலங்கை? Empty தென் சீனக்கடல் விவகாரத்தில் சீனா பக்கம் சாய்கிறதா இலங்கை?

Post by oviya Sun Jun 07, 2015 12:31 pm

தென் சீனக்கடல் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டையே இலங்கை முழுமையாக ஆதரிப்பதாக, சர்ச்சைக்குரிய வாக்குறுதி ஒன்றைச் சீனாவிடம் வழங்கியிருக்கிறார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன.
கடந்த மாத இறுதியில் சிங்கப்பூரில் நடந்த சங்கிரிலா கலந்துரையாடல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் 14 வது ஆசிய பாதுகாப்பு மாநாட்டின், பக்க நிகழ்வாக நடந்த சந்திப்பு ஒன்றிலேயே இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள், படைத்தளபதிகள் பங்கேற்கும் உயர்மட்ட மாநாடு இது. ஆண்டு தோறும் நடத்தப்படும் இந்த மாநாட்டில் ,அமெரிக்காவும் பங்கேற்பதுண்டு.

இம்முறை இந்த மாநாட்டில் பங்கேற்ற சீனப் பிரதிநிதிகளின் குழுவுக்கு, சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் பிரதித் தலைமை அதிகாரி அட்மிரல் சன் ஜியான்கூ தலைமை தாங்கியிருந்தார்.

கடந்த 29 ம் திகதி பிற்பகல் அட்மிரல் சன் ஜியான்கூ தலைமையிலான சீனப் பிரதிநிதிகள் குழுவுக்கும், ருவன் விஜேவர்தன தலைமையிலான இலங்கையின் பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையே பேச்சுக்கள் நடத்தப்பட்டன.

இலங்கைக் குழுவில், பாதுகாப்புச் செயலர் பஸ்நாயக்க, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, கடற்படை மற்றும் விமானப்படையின் தலைமை அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தப் பேச்சுக்களின் அடிப்படை, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள், உதவிகளை விரிவாக்கம் செய்வதேயாகும்.

இந்தச் சந்திப்பின் போது அட்மிரல் சன் ஜியான்கூ,சில விருப்பங்களை, விடயங்களை முன்வைத்திருந்தார். அதாவது,

இரண்டு நாடுகளுக்கும் இடையில் ,எந்தக் காலத்திலும் நட்புறவை ஏற்படுத்தும் வகையிலான கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள சீனா விரும்புகிறது.
இரு நாடுகளுக்கும் இடையில் ,உண்மையான பரஸ்பர உதவிகளையும், பரம்பரை பரம்பரையான நட்புறவையும் உறுதிப்படுத்தும் வகையில் விரிவான மூலோபாய ஒத்துழைப்பை தொடர்ந்து முன்நோக்கி நகர்த்த வேண்டும்.
இலங்கை - சீனா இடையே இராணுவ உறவுகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாக செயற்பாட்டு அணுகுமுறையை சீனா கொண்டுள்ளது. பரந்துபட்ட அளவில், உயர் மட்டத்தில் ,இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் விருத்தி செய்ய சீனா விரும்புகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

அதேவேளை ,பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, இலங்கையின் இராணுவக் கட்டுமானத்துக்கு சீனா உதவ முடியும் என்றும், இரண்டு தரப்பும் தொடர்ந்து பாதுகாப்பு கலந்துரையாடல்களையும், கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்களையும் மேற்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதுமட்டுமன்றி, ஒரே சீனா என்ற கொள்கையையும், தென்சீனக்கடல் விவகாரத்தில், சீனாவின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு சர்ச்சைக்குரிய விடயம், ஒரே சீனா என்ற கொள்கையை ஆதரிப்பது அல்ல. அது நீண்ட காலமாக இலங்கையில் ஆட்சி செலுத்தும் அரசாங்கங்களினால் கடைப்பிடிக்கப்படும் கொள்கை.

ஏற்கனவே சீனாவுக்கு, மேற்கொண்ட பயணத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அதனை உறுதிப்படுத்தியிருந்தார்.

எனவே,ஒரே சீனக் கோட்பாட்டை ஆதரிப்பதான வாக்குறுதி சீனாவுக்கு முக்கியமானதாக இருந்தாலும், இலங்கையைப் பொறுத்தவரையில், அது பெரிய விடயமல்ல.

ஆனால், இரண்டாவதாக கொடுத்த தென் சீனக்கடல் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிப்பதான வாக்குறுதி தான் சர்ச்சைக்குரியது. இப்படியொரு வாக்குறுதி சீன அட்மிரலுக்கு கொடுக்கப்பட்டமை குறித்து, பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

ஏனென்றால்,இது சர்ச்கையை ஏற்படுத்தும் என்பதை அரசாங்கமும் - பாதுகாப்பு அமைச்சும் நன்றாகவே அறியும். ஆனால், சிங்கப்பூரில் உள்ள சங்கிரிலா விடுதியில் நடந்த சந்திப்புத் தொடர்பாக, சீனப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அதிகாரபூர்வ செய்திக் குறிப்பில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன கொடுத்த வாக்குறுதி பற்றிக் கூறப்பட்டுள்ளது.

தென்சீனக் கடலில் உள்ள தீவுகளுக்கு சீனா உரிமை கோருவதால் அது சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறியிருக்கிறது. தென் சீனக்கடலில் உள்ள தீவுகளுக்கு பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்வான், புரூணை, மலேஷியா உள்ளிட்ட நாடுகளும் உரிமை கோருகின்றன.

இந்த விவகாரத்தில் ஏனைய நாடுகளின் எதிர்ப்புகளை மீறி தென் சீனக்கடலில் தனது கடற்பலத்தைப் பெருக்கி வருகிறது சீனா.

தென் சீனக்கடல் பகுதியில் செயற்கையான தீவை உருவாக்கி அதில் பாரிய விமானத்தளம் ஒன்றையும், கடற்படைத் தளத்தையும் அமைக்கும் பணியை சீனா தீவிரப்படுத்தியுள்ளது.

தென் சீனக்கடலில் உள்ள தீவுகளின் உரிமை தொடர்பாக சீனா அத்துமீறிச் செயற்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. ஆனால், சீனா அதனைக் கண்டுகொள்ளாமல், தனது பலத்தைப் பெருக்கும் முயற்சியை தீவிரப்படுத்தியிருக்கிறது. சங்கிரிலா மாநாட்டில் கூட தென் சீனக்கடல் விவகாரத்தில் சீனாவின் அத்துமீறலை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் கண்டிருத்திருக்கிறார்.

இந்த நிலையில் தான், இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தென் சீனக்கடல் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டுக்கு இலங்கை ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருக்கிறார். இந்த வாக்குறுதி அமெரிக்காவையும், ஏனைய தென்கிழக்காசிய நாடுகளையும் கோபத்துக்குள்ளாக்கும் ஒரு நடவடிக்கையாக அமையலாம்.

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் பிரதமராக இருந்த டி.எம்.ஜெயரட்ன ,வியட்னாமுக்குப் பயணம் செய்திருந்த போது, தென் சீனக்கடல் விவகாரத்தில் வியட்நாமின் நிலைப்பாட்டை இலங்கை ஆதரிப்பதாக கூறியிருந்தார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சீனா சினங்கொண்டு, கொழும்பிடம் கேள்வி எழுப்பியது.

உடனடியாகவே ,ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ,வெளிவிவகார அமைச்சராக இருந்த ஜி.எல்.பீரிஸ் மூலம், பிரதமரின் அறிக்கையில் திருத்தம் இருப்பதாக அறிவிப்பை வெளியிடச் செய்தார்.

தென் சீனக்கடல் விவகாரத்துக்கு பேச்சு மூலம் சம்பந்தப்பட்ட தரப்புகள் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இலங்கையின் நிலைப்பாடு என்று அறிக்கையைத் திருத்திக் கொண்டார் பீரிஸ்.

அப்போது கூட, தென் சீனக்கடல் விவகாரத்தில் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் சீனாவுக்குச் சார்பாக கருத்துக்களை வெளியிடாமல் நழுவியிருந்தார். ஆனால், இப்போதைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன ஒரு படி முன்னே சென்று, தென் சீனக்கடல் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாக கூறியிருக்கிறார்.

இது அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளை சந்தேகத்துடன் பார்க்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. சங்கிரிலா விடுதியின் சீனப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், இலங்கைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்ட பின்னர், இந்திய ஊடகங்கள் அதற்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்திருந்தன.

மீண்டும் சீனாவுடன் இலங்கை ஒட்டிக்கொள்ளத் தொடங்கியிருப்பதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன. அதேவேளை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன புதிய அரசாங்கத்தில் முன்னிலைப்படுத்தப்படக் கூடிய ஒருவராக இருப்பார் என்று கணிக்கப்பட்ட போதிலும், பல்வேறு சர்ச்சைகளில் அவர் சிக்கி வருகிறார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு அடுத்து, ஐ.தே.க வின் தலைமைப் பதவிக்கான போட்டியாளராகக் கருதப்படும் அவர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்ற பின்னர், வடக்கு, கிழக்கு படைத்தளங்களுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது வெளியிட்ட கருத்துக்கள் அவரிடம் இருந்து முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் நீக்கப்படுவதற்கு காரணமாயிற்று.

படைவிலக்கம் குறித்த வெளியிட்ட கருத்துக்களால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு பாதுகாப்பு அமைச்சில் முக்கியத்துவமற்ற துறைகளையே ஒதுக்கிக் கொடுத்திருந்தார்.

அதற்குப் பின்னர் அவர் பாதுகாப்புத் துறையின் முக்கியமான நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை. கடந்த ஏப்ரல் மாதம் 19ம் திகதி இலங்கைக்கு அப்பால் தரித்து நின்ற ,அமெரிக்க கடற்படையின் ”யு.எஸ்.எஸ்.கார்ல்வின்சன்” என்ற பாரிய விமானந்தாங்கி கப்பலுக்கு, இலங்கை அரசாங்கக் குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, கடற்படைத் தளபதி, பாதுகாப்புச் செயலர் போன்றோர் அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் அந்தக் குழுவில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன இடம்பெற்றிருக்கவில்லை.

எதற்காக அமைச்சர் பௌசி அந்தக் குழுவில் தெரிவு செய்யப்பட்டார் என்பதும், எதற்காக அந்தக் குழுவில் இருந்து அமைச்சர் ருவன் விஜேவர்தன ஓரங்கட்டப்பட்டார் என்பதும் கேள்விக்குரிய விடயமே.

ஏனென்றால், அமெரிக்க விமானந்தாங்கி கப்பலுக்கு அழைத்துச் செல்லப்படும் அளவுக்கு அமைச்சர் பௌசி ஒன்றும் பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடையவர் அல்ல.

அதேவேளை, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக இருந்தும். ருவன் விஜேவர்தன தவிர்க்கப்பட்டதையும், சாதாரணமாக கருத முடியவில்லை. இத்தகைய நிலையில்,சங்கிரிலா கருத்தரங்கில் சீனத் தரப்புடன் நடத்திய பேச்சுக்களின் போது, அமைச்சர் ருவன் விஜேவர்தன, சீனாவுக்கு சார்பாக நடந்து கொண்டிருப்பதும் அமெரிக்கத் தரப்பை கொஞ்சம் கவனத்தில் கொள்ளவே செய்திருக்கும்.

ஏனென்றால்,இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அமெரிக்கா ஒரு வரமாக கருதுகிறது. அந்த வரம் தனது கையை விட்டுப் போவதை அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது.

இலங்கையில் இருந்து சீனாவை ஓரம் கட்டுவதில் அமெரிக்கா கணிசமான முன்னேற்றம் கண்டு வந்துள்ள நிலையில் ,ருவன் விஜேவர்தனவின் கருத்து அமெரிக்காவுக்கு சவாலான விடயமாகவே இருக்கும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum