Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சீனா – இந்தியா இடையே தடுமாறும் இலங்கை

Go down

சீனா – இந்தியா இடையே தடுமாறும் இலங்கை  Empty சீனா – இந்தியா இடையே தடுமாறும் இலங்கை

Post by oviya Sun Mar 08, 2015 12:17 pm

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான அதிகாரப் பேட்டியில், நடுநிலையாக செயற்படும் முடிவை மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் எடுத்திருந்தாலும் அந்த முடிவைச் செயற்படுத்துவதில் கடுமையாகவே போராட வேண்டியிருக்கிறது.
கடந்த மாத இறுதியில் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பீஜிங்கில் வைத்து வெளியிட்ட கருத்துக்களும் சீனா விடயத்தில் இலங்கையின் நகர்வுகள் தோல்வியில் முடிந்திருப்பதையே உணர்த்துகின்றன.

இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு மிகவும் பொறுமையான ஒரு பயணத்தை சீனாவுக்கு மேற்கொண்டிருந்தார் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர. கொழும்புத் துறைமுக நகரத்திட்டம் உள்ளிட்ட சீனாவின் முதலீட்டில் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் எதிர்காலம் குறித்து அச்சங்கள் எழுந்திருந்த நிலையிலும் கூட, பீஜிங்கிற்கான பயணத்துக்காக மங்கள சமரவீர ஒன்றும் அவசரப்படவில்லை.

இலங்கையைப் பொறுத்தவரையில் இந்தியாவுக்கு அடுத்த நிலையில் முக்கியத்துவமான நாடாக சீனாவே விளங்குகின்றது. சர்வதேச அளவில் சீனா தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக மாறியுள்ள நிலையில், சீனா விடயத்தில், இலங்கையின் புதிய அரசாங்கம் கொஞ்சம் அளவுக்கதிகமாகவேபரிசோதனையை மேற்கொண்டுவிட்டது.

இந்தியாவை எப்டியாவது கைக்குள் புாட்டுக் கொண்டு விடவேண்டும் என்ற ஆவலும் அமெரிக்காவின் ஆதரவு இருக்கிறது என்ற எண்ணமும் சீனா விடயத்தில் இலங்கையைக் கொஞ்சம் கர்வம் கொள்ள வைத்து விட்டது.

ஆரம்பத்தில் கொழும்புத் துறைமுக நகரத்திட்ட விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் கொஞ்சம் கடும் போக்கையே வெளிப்படுத்தியதாயினும் பின்னர் மெல்ல மெல்ல தளர்ந்து போனது. குறிப்பாக சீன ஜனாதிபதியின் விசேட தூதுவராக உதவி வெளிவிவகார அமைச்சர் லியூ ஜியான்சோ கொழும்பு வந்து சென்ற பின்னர் கொழும்புத் துறைமுக நகரத்திட்டம் கைவிடப்படாது என்றளவில் வெளிப்படையாக பேசத் தொடங்கியது புதிய அரசாங்கம்.

புதுடில்லியிடம் சீனாவின் கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இரத்துச் செய்யப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிய அறிவிப்பு பலரையும் ஆச்சரியம்கொள்ள வைத்தது. அதாவது இந்தியத் தலைநகரிலே துணிச்சலுடன் அதைக் கூறியிருப்பதாக பலரும் கருதினர் அதேவேளை அந்த கருத்து இந்தியாவுக்கு ஏமாற்றத்தையே அளித்திருந்தது. ஏனென்றால் கொழும்புத் துறைமுக நகரத்திட்டம் இரத்துச் செய்யப்படும் என்று அதிகம் எதிர்ப்பார்த்திருந்தது இந்தியா தான்.

எனவே சீனா விடயத்தில் இலங்கை அரசின் நிலைப்பாடு புதுடில்லியை கொஞ்சம் அவதானமாகவே இருக்க வேண்டும் என்ற உணர்வை இந்தியாவுக்கு ஏற்படுத்தியிருந்தது. இப்போது கூட, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்பு வரவுள்ள நேரத்தில் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்த முடிவெடுத்துள்ளது அரசாங்கம். ஆனால் இது நிரந்தரமான முடிவு அல்ல.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அனுமதி முறைப்படி பெறப்படவில்லை என்றும், அது தொடர்பாக பெறப்பட்ட அனுமதிகளை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் அரசாங்கம் கூறியிருக்கிறது. அதாவது மோடி கொழும்புக்கு வந்து செல்லும் வரை இந்த இடைநிறுத்தம் தொடரப்போகிறது. அதற்கு பின்னர் சீனாவுடன் இந்த விடயத்தில் சமரசம் ஏற்படுத்தப்படும் வாய்புகள் உள்ளன.

சீனத் தரப்பின் கருத்துகளில் இருந்து அதனை உணர முடிகிறது. அதேவேளை சீனா - இந்தியா ஆகிய இரண்டு நாடுகளையும் சமதூரத்திலேயே தாம் வைத்து நோக்கவுள்ளதாகவும், தாம் அணி சேரா நாடு என்பதையும் மைத்திரிபால சிறிசேன புதுடில்லியில் வலியுறுத்தியிருந்தார்.

அண்மையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பீஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய போதும் இந்த நடுநிலைக் கோட்பாட்டையே முன்னிலைப்படுத்தியிருந்தார். இரண்டு நாடுகளின் பக்கமும் சேராமல் பொதுவான நிலையில் இருக்கவே இலங்கை விரும்புவதாக அவர் கூறியிருந்தார்.

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவும் இந்தியாவும் முட்டிமோதி வருகின்ற நிலையில் இரண்டு நாடுகளுக்கும் நடுவே தனியானதொரு பாதையில் பயணிக்க முனைகிறது இலங்கை அரசாங்கம். தாம் இரண்டு தரப்புக்கும் பொதுவானவர் என்று நிரூபிப்பதற்காக புதுடில்லியில் வைத்து சீனாவை அரவணைத்துப் பேசுவதும் பீஜிங்கில் வைத்து இந்தியாவுக்கு சார்பாக பேசுவதும் தமது புத்திசாலித்தனமான நகர்வாக கருதுகிறது இலங்கையின் புதிய அரசாங்கம்.

பீஜிங்கில் வைத்து சீன நீர்மூழ்கிகளுக்கு இனிமேல் இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி வழங்கப்படாது என்று தெளிவாக கூறியிருந்தார் மங்கள சமரவீர. இது கொழும்புத் துறைமுக நகரம் தொடர்பான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்தினால், கவலை கொண்டிருந்த இந்தியாவை அப்படியே ஆனந்தத்தில் உறைய வைத்துவிட்டது அதேவேளை சீனாவுக்கோ, கடுமையான எரிச்சலைத் தான் ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கை உண்மையிலேயே யாருக்கு நண்பனாக இருக்கப் போகிறது என்ற கேள்வி இரு நாடுகளுக்குமே இருக்கிறது. மங்கள சமரவீர பீஜிங்கில் இருந்து ஜெனீவாவுக்கு புறப்பட்டதும் நீர்மூழ்கி குறித்த அவரது கருத்து குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுன்யின்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்கு அவர் ஏடன் வளைகுடாவில் செல்லும் போது தான் எரிபொருள் நிரப்புவதற்காக நீர்மூழ்கிகள் கொழும்பில் தரித்துச் சென்றன. இது வழக்கமாக உலகில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை தான். முன்னரே இலங்கை அரசாங்கத்திடம் அனுமதி பெற்று விட்டுதான் கொழும்பு துறைமுகத்துக்குள் சீன நீர்மூழ்கிகள் கொழும்பில் தரித்துச் சென்றன.

முன்னரே இரங்கை அரசாங்கத்திடம் அனுமதி பெற்று விட்டுதான் கொழும்புத் துறைமுகத்துக்குள் சீன நீர்மூழ்கிகள் நுழைந்தன. அதேபோல கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைக்கு செல்லும் சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளின் நீர்மூழ்கிகளுக்கு இலங்கை தொடர்ந்து அனுமதி அளிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என்று அவர் கூறியிருந்தார்.

இதன் வெளிப்படையான கருத்து சீன நீர் மூழ்கிகளுக்கு கொழும்பில் இனிமேலும் இடமளிக்கப்பட வேண்டும் என்பது தான். இதனை வேண்டுகோளாகவும் எடுத்துக் கொள்ளலாம் கண்டிப்பான வலியுறுத்தலாகவும் எடுத்துக் கொள்ளலாம். வரும் காலத்தில் சந்தர்ப்பம் வாய்க்கும் போது தான், சீனா இதனை வேண்டுகோளாக விடுத்ததா, அழுத்தமாக கொடுத்ததா அல்லது நிபந்தனையாக விதித்ததாக என்பதை உணர முடியும்.

ஏனென்றால் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்புகள் பல்வேறு வகையிலானவை அத்துடன் தனியே நீர்மூழ்கி விவகாரத்தினால் மட்டும் இருநாட்டு உறவுகளில் சர்ச்சைகள் ஏற்கட்டிருக்கவுமில்லை.

சீனாவைப் பொறுத்தவரையில் இலங்கைக்கு கோடி கோடியாக கடன்களை அள்ளிக் கொடுத்திருக்கிறது. சீனாவுக்கு கிட்டத்தட்ட 5 பில்லியன் டொலர் கடனைச் செலுத்த வேண்டிய நிலையில் இலங்கை இருக்கிறது. இலங்கை நாணயப் பெறுமதிப்படி பார்த்தால் கிட்டத்தட்ட 65 ஆயிரம் கோடி ரூபாவுக்கும் அதிகம் இந்தக் கடன் இலங்கைக்கு மிகப்பெரிய சுமையை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.

இந்தக் கடனுக்கு அதிக வட்டி செலுத்தப்படுவதாக புதிய அரசாங்கம் கருதுகிறது. பீஜிங்கில் இதுபற்றி கவலை வெளியிட்டிருந்த மங்கள சமரவீர இதுகுறித்து பேசுவதற்கு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க விரைவில் பீஜிங் வருவார் என்றும் கூறியிருந்தார். இதுவும் சீனாவுக்கு கடுப்பையே ஏற்படுத்தியிருக்கிறது.

இலங்கை கேட்டு கொண்டதால் தான் கடன்களை வழங்கினோம் இருதரப்பும் இணங்கியே அதற்கான நிபந்தனைகள் தீர்மானிக்கப்பட்டன. இருதரப்புக்கும் நன்மையளிக்கும் வகையில் தான் கடன் விதிமுறைகள் வகுக்கப்பட்டன என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறியிருந்தார்.

இதன் அர்த்தம் என்னவென்றால் சீனா வழங்கிய கடன்களுக்கான நிபந்தனைகளைத் தளர்த்துவதற்கு தயாராக இல்லை என்பது தான் இந்த விதிமுறைகளைத் தளர்த்த முனைந்தால் 1.5 பில்லியன் டொலர் முதலீட்டிலான கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை தொடர அனுமதிக்க முடிவெடுத்தாலும் முன்னய அரசாங்கத்துடன் செய்யப்பட்ட உடன்பாட்டுக்கமைய அதனைத் தொடர விடுவதில்லை என்பதே புதிய அரசின் நிலைப்பாடாக உள்ளது. அதாவது இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு குந்தகம் ஏற்படுத்தாத வகையில் அதனை செயற்படுத்த எத்தனிக்கிறது இலங்கை.

ஆனால் சீனா அவ்வளவு இலகுவாக தன்னுடன் செய்து கொண்ட உடன்பாடுகளை மாற்றிக் கொள்ள இணங்காது என்பதையே சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரின் கருத்துகளில் இருந்து உணர முடிகிறது. இலங்கை சீனா இந்தியா என முத்தரப்பு இழுபறிக்குள் இந்த ஒரு விவகாரம் மட்டும் மாட்டிக் கொள்ளவில்லை ஒன்றின் மீது கை வைத்தால் அது இன்னொன்றையும் கூடவே இழுத்துக் கொண்டு வருகின்றது. ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதாக இந்த விவகாரங்கள் மாறியிருக்கின்றன.

இது ஒரு இடியப்ப சிக்கல் போலத் தான். சீனாவையும் சமாளித்து இந்தியாவையும் சமாளித்து நடுநிலையாக செயற்படுவதென்பது இலங்கைக்கு பெரிய சோதனை தான். இலங்கையின் மீது சீனாவின் செல்வாக்கு அளவுக்கதிகமாக வளர்ந்துள்ள நிலையில் அதனை விட்டு சற்று நகர்ந்து கொள்வது கடினமானது.

அதேவேளை சீனாவிடம் இருந்து புதிய அரசாங்கம் விலகிப் போகவில்லை என்று நம்பவைப்பதற்காக மங்கள சமரவீர பீஜிங் சென்றிருந்தால் அந்த முயற்சியில் தோல்வி கண்டிருக்கிறார் என்றே கூறமுடியும் இந்த மாத இறுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சீனா செல்லவுள்ளார். அவர் எவ்வாறு சீனாவைக் கையாள போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum