Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மிக்-27 விமான கொள்வனவில் எந்த மோசடிகளும் இடம்பெறவில்லை: கோத்தபாய

Go down

மிக்-27 விமான கொள்வனவில் எந்த மோசடிகளும் இடம்பெறவில்லை: கோத்தபாய Empty மிக்-27 விமான கொள்வனவில் எந்த மோசடிகளும் இடம்பெறவில்லை: கோத்தபாய

Post by oviya Thu Jun 04, 2015 1:13 pm

2006 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மிக் விமானங்களில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

2006ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மிக் விமானம் தொடர்பில் விசாரணை மேற்கொள்கின்ற பொலிஸ் நிதி குற்ற புலனாய்வு பிரிவு, அக்கொள்வனவு மேற்கொள்வதற்கு முன்னர் பிரித்தானியா, வர்ஜின் தீவின் பெலிமீசா ஹோல்டின்ஸ் என்ற நிறுவத்தினால் ஆரம்பிக்கப்பட்ட ரகசிய வங்கி கணக்கினை கண்டுபிடித்துள்ளதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆங்கில ஊடகமொன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மிக் விமான கொள்வனவு தொடர்பில் பிரசுரமான முதல் சந்தர்ப்பம் இதுவல்ல. கடந்த 09 வருடங்களாக தொடர்ந்து இது தொடர்பில் செய்திகள் ஊடகங்களில் வெளியாகிக் கொண்டுள்ளன.

அரசாங்கம் மாறிய பின்னர் எங்களது எதிராளிகள் இக்காரணங்கள் தொடர்பில் மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளதனால் மிக் விமான கொள்வனவு உண்மையில் என்ன என்பது குறித்து பொது மக்களுக்கு தெரியபடுத்தும் உரிய சந்தர்ப்பம் இதுவென நான் நினைக்கின்றேன்.

இவ் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதனையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

1. 2000ஆம் ஆண்டு சந்திரிக்கா குமாரதுங்க அரசாங்கத்தினால் மிக்-27 விமானங்கள் இரண்டில் ஒன்று மிக்-23 விமானம் கொள்வனவு செய்த சந்தர்ப்பத்தில் அவற்றை வழங்க 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி ஒப்பந்தங்களுக்கு கையொப்பமிடப்பட்டது. சிங்கப்பூர் டீ.எஸ்.எலயன்ஸ் நிறுவனத்தின் டீ.எஸ்.லீ என்பருடனே ஒப்பந்தங்களுக்கு கையொப்பமிடப்பட்டுள்ளது. மிக் விமானங்கள் தயாரிப்பது சிங்கப்பூரில் அல்ல. அனைத்து ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை நேரடியாக உற்பத்தியாளர்களிடம் பெற்றுக்கொண்டு இடைத்தரகரை நீக்குவதே எங்கள் அரசாங்கத்தின் கொள்கையாக காணப்படுகின்றது.

2. 2006ஆம் ஆண்டு புதிய மிக்-27 விமானங்கள் 04 கொள்வனவு செய்வதும்’, விமானப்படையில் இருந்த 03 மிக்-27 விமானங்கள் மற்றும் மிக்-23 விமானத்தை முற்றிலும் புதுப்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்ட போது, எங்களுக்கு யுக்ரேனில் மிக் விமானங்கள் தயாரிக்கப்படும் “யுக்ரின்மாஷ்” எனப்படும் நிறுவனத்துடன் நேரடியாக தொடர்பு ஏற்பட்டது. “யுக்ரின்மாஷ்” நிறுவனம் 2006ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 06ஆம் திகதி எங்கள் பாதுகாப்பு அமைச்சிற்கு இது தொடர்பிலான மிக் விமான கொள்வனவு மற்றும் புதுப்பிக்க வேண்டியவைக்கான கணக்குகளை முன்வைத்த முதல் கடிதத்தில், இக் கொடுக்கல் வாங்கல்களை நிதி நிறுவனம் ஒன்றினை தலையீட்டில் இடம்பெறும் எனவும், அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் அந்த நிதி நிறுவனத்தினால் இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இக்கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு 03 நாட்களுக்குள் குறித்த நிதி நிறுவனத்தின் பெயரை தெரியப்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

3. 2001-2004ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் மிக்-27 விமானம் 4 கொள்வனவு தொடர்பில் “யுக்ரின்மாஷ்” நிறுவனத்திடம் வினவியுள்ளனர். யுக்ரின்மாஷ்” நிறுவனம் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரபனவுக்கு விலை மனு தொடர்பாக அனுப்பப்பட்ட கடிதத்தில் இக் கொடுக்கல் வாங்கல்களை நிதி நிறுவனம் ஒன்றின் தலையீட்டில் இடம்பெறும் எனவும், அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் அதன் நிதி நிறுவனத்தினால் இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இக்கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான ஒப்பந்ததத்தில் கையொப்பமிட்டு 03 நாட்களுக்குள் குறித்த நிதி நிறுவனத்தின் பெயரை இலங்கைக்கு தெரியப்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. “யுக்ரின்மாஷ்” நிறுவனம் திலக் மாரபனவுக்கு அனுப்பிய கடித்ததில் பணம் செலுத்தும் முறை சம்பந்தமாக குறிப்பிடப்பட்டிருந்தவை 2006ஆம் ஆண்டு எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் ஒவ்வொரு வார்த்தையும் அதேபோல் இருந்தது.

4. “யுக்ரின்மாஷ்” நிறுவனம் முற்றிலும் யுக்ரேன் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனம் எனவும், அந்நாட்டு சட்டத்திற்கமைய அவர்களுக்கு கடனுக்கு பொருட்கள் வழங்க முடியாதென “யுக்ரின்மாஷ்” நிறுவனத்தின் இயக்குனரான டீ.ஏ.பெரிகுடோவ் இலங்கை பாதுகாப்பு அமைச்சிற்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். எங்களிடம் கேட்டுக்கொண்டதற்கமைய இரண்டு வருடங்களில் பணத்தினை மீள் செலுத்தும் வகையில் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியாமையினால் பெலிமிஸா ஹோல்டீன்ஸ் என்ற நிதி நிறுவனம் இக்கொடுக்கல் வாங்கலிற்கு பணம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

5. 2005ஆம் ஆண்டு ஜுலை மாதம் 26ஆம் திகதி மிக்-27 விமான 4 கொள்வனவு செய்வதற்கும் மேலும் 04 மிக் விமானங்களை முற்றிலும் புதுப்பிப்பதற்குமான ஒப்பந்தத்திற்கு கையொப்பமிடுவதற்கு மூன்று தரப்பினர் சம்பந்தப்பட்டனர். இலங்கை விமானப்படை பெற்றுக்கொள்ளும் தரப்பினர். யுக்ரிமாஷ் நிறுவனத்தின் விற்பனையாளர் தரப்பினர். பெலிமிஸா ஹொலிடின்ஸ் அனைத்து கொடுக்கல் வாங்கல் தரப்பினர். இவ் ஒப்பந்தம் இலங்கை மற்றும் யுக்ரேன் அரசாங்க முகவர் நிலையங்கள் இரண்டிற்கிடையில் இடம்பெற்று, யுக்ரேன் மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் சட்ட பிணைப்பு ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தமாகும்.

6. இவ் ஒப்பந்தம் 23.1 பிரிவுக்கமைய பெலிமிஸா ஹொல்டின்ஸ் நிறுவனத்தினால் இக்கொடுக்கல் வாங்கலுக்காக பணம் உதவிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இதற்கு வாங்கும் தரப்பினரும் விற்கும் தரப்பினரும் ஏற்றுக்கொள்கின்ற நிலையில் இக்கொடுக்கல் வாங்கல்களுக்கு உரிய அனைத்து கொடுப்பனவுகளும் பெலிமிஸா ஹொல்டின்ஸ் நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டும் என்பது தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

7. 2006ஆம் ஆண்டு ஜுலை மாதம் 31ஆம் திகதி யுக்ரிமாஷ் நிறுவனத்தினால் மிக் விமானங்கள் கொள்வனவு மற்றும் புதுப்பிக்கும் விலைப்பட்டியல் இலங்கை விமானப்படைக்கு அனுப்பி வைக்கும் போது இலங்கை வங்கியினால் பெலிமிஸா ஹொலிடின்ஸ் நிறுவனத்திற்கு பணம் செலுத்த வேண்டும் என்பது மீண்டும் ஒரு முறை குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனத்துடன் விமானம் பெற்றுக்கொள்ளும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதன் பின்னர் வாங்குபவர் விற்பனையாளரின் பரிந்துரைக்கமையவே பண கொடுக்க வேண்டும்.

பெலிமிஸா ஹொலின்டிஸ் நிறுவனம் இவ் ஒப்பந்தத்திற்கு கையொப்பமிட்ட தரப்பினர் என்பதனால் அவர்களுக்கு பணம் செலுத்துவது ஒரு ரகசியமான விடயமல்ல.

நாங்கள் இந்த மிக் விமானங்களை நேரடியாக யுக்ரேன் தயாரிப்பாளர்களிடம் பணத்திற்கு பெற்றுக்கொண்டதோடு செலுத்திய பணத்தில் பெற்றுக்கொள்ள வேண்டிய அனைத்தும் எங்களுக்கு கிடைத்து விட்டது.

இந்த விமானங்கள் யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்டதோடு, யுத்தத்தை வெற்றிக்கொண்டதன் பின்னரும் இன்னமும் குறித்த விமானங்கள் விமானப்படையினரிடம் உள்ளது.

இவ் மிக் விமானங்கள் கொள்வனவு செய்தமை தொடர்பில் ரகசியமாக ஏதேனும் இடம்பெற்றுள்ளதாக மக்களை சமாதானப்படுத்தும் இவ் முயற்சி எனது பெயரை அவமதிப்பதற்காக நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.

போலியான ஒரு விடயத்தினை மீண்டும் மீண்டும் கூறுவதன் மூலம் உண்மையாக்குவதற்கு முயற்சிக்கும் பல்வேறு தரப்பினரின் தவறான பிரச்சாரங்களில் வழியில் செல்ல வேண்டாம் என இலங்கை மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum