Top posting users this month
No user |
Similar topics
வட கிழக்கில் மீள்குடியேற்றம் முழுமையாக இடம்பெறவில்லை: கி.துரைராஜசிங்கம்
Page 1 of 1

வட கிழக்கில் மீள்குடியேற்றம் முழுமையாக இடம்பெறவில்லை என கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
வடகிழக்கில் மீள் குடியேற்றம் முழுமையாக இன்னும் நடைபெறவில்லை ஒரு நாட்டில் போர் நடைபெற்று முடிந்ததும் மீள்குடியேற்றம் முக்கியமாக செய்யப்படவேண்டும் ்.
போர் நடைபெற்று ஆறுவருடமாகியும் இன்னும் அம்பாறையில் தங்கவேலாயுதம் கஞ்சுகுடிச்சாறு ஆகிய இடங்கள் குடியேற்றப்படாது இருக்கிறது இவ்வாறு தமிழ்க் கிராமம் மட்டுமல்ல முஸ்லிம் பகுதிகளும் அவ்வாறுதான் இருக்கிறது என கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
நகர எழுச்சித்திட்டத்திகன் கீழ் நாவிதன்வெளிப்பிரதேச சபையில் அமைக்கப்பட்ட கட்டிடத்தினை திறந்துவைக்கும் நிகழ்வு தவிசாளர் சி.குணரெட்ணம் தலைமையில் திங்கட்கிழமை 11 ம், திகதி இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர்மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சிசபைகள் அதிகாரப்பரவலாக்கலை அடிமட்டத்தில் இருந்து செய்வதற்காக அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு இருக்கின்றன
எங்களது நாட்டினுடைய துர்ப்பாக்கிய நிலை என்னவென்றால் உள்ளூராட்சி மன்றங்களுக்கோ மக்களுக்கோ சரியாக அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவில்லை அந்த அதிகார பகிர்ந்தளிப்புக்குமேலாக அதிகாரம் பங்கிடப்படவேண்டும்.
தமிழ்பேசும் மக்களின் நிலத்தையும் மொழியையும் வாழ்வையும் பேரினவாதம் விழுங்குவதற்கு வந்தபோது நாங்கள் உறங்கிக்கொண்டிருந்தோம் அப்போது விழித்திருக்க வைத்தவர் தந்தை செல்வா அப்போது தந்தை செல்வாவுக்கு கரம்கொடுத்தவர்கள் காரியப்பர் மசூர் மௌலான போன்றவர்கள் அப்போது தமிழ்பேசும் இனம் என்ற அழைக்கப்பட்டோம்.
தமிழ்பேசும் மக்களின் பிரதேசங்களிலே தமிழ்பேசும் இனத்திற்கு எதிராகசெயற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபோது கச்சேரியை முடக்கி நிர்வாக செயற்பாடுகளை 52 நாட்கள் முடக்கி வைத்திருந்தோம் இதில் விசேட அம்சம் என்னவென்றால் இந்தப்போராட்டத்தில் அதிகமானவர்கள் முஸ்லிம் பெண்கள் கலந்துகொணடனர் இவ்வாறு ஒற்றுமையாக சேர்ந்து வாழ்ந்த நாம் சில துர்ப்பாக்கிய நிலையினால் பிரிக்கப்பட்டோம் வேறு வேறு விதமான இன்னல்களுக்கு ஆளானோம்.
ஜனவவி 8 ஆம் திகதிக்குப்பின்னர் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாங்கள் கிழக்குமாகாணத்தில் தமிழ்முஸ்லிம் இணைந்த ஆட்சியினை நிறுவியிருக்கின்றோம்.
தமிழ்முஸ்லிம் மக்களின் நிலம் கபளிகரம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது இதுதொடர்பான பல கட்டுரைகளை முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் வெளியிட்டிருக்கின்றார்
இனிவரும் காலத்தில் தமிழ் முஸ்லிம் உறவை நெருக்கமாக பயன்படுத்தி எங்களது அடுத்த கட்டத்தினை நகர்த்தவேண்டியவர்களாக இருக்கின்றோம்.
கடந்த அரசாங்கத்தால் அதிகாரங்கள் கொடுக்கப்பட்டது எவ்வாறு என்றால் கொக்குக்கு பாயாசம் கொடுத்தது போல அதாவது தட்டையான பாத்திரத்தில் பாயசத்தை கொடுத்தால் எவ்வாறு குடிக்கமுடியும் அவ்வாறுதான் அதிகாரங்கள் வழங்கப்பட்டபோதும் அதனை கையாண்டு நடைமுறைப்படுத்தமுடியாத அளவிற்கு கடந்த அரசாங்கம் செயற்பட்டது.
யாராக இருந்தாலும் அந்தந்த அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தடையாக இருக்கக் கூடாது அவ்வாறு தடைவிதித்தால் அதுமனித உரிமை மீறலாகும் இனிவரும் காலங்களில் அவ்வாறு இல்லாமல் இந்த அதிகாரங்கள் யார் யாருக்குசென்றடைய வேண்டுமோ அது உரியவேளையில் சென்றடைவதற்கு தடைபோடக் கூடாது. தமிழ் சிங்களம் முஸ்லிம் என்ற வேறூட்டினை தூக்கி வீசிவிட்டு ஒருதாய் வயிற்றில் பிறந்தவர்கள் என்ற சிந்தனையிலும் உணர்வுடனும் செயற்படவேண்டும் என்றார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மைத்திரி – மஹிந்த சந்திப்பு இடம்பெறவில்லை!– மஹிந்தவின் ஊடக பேச்சாளர்
» யாழில் மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல்
» வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குறித்து விரைவில் பேச்சு: ரிசாட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum