Top posting users this month
No user |
Similar topics
ஜனாதிபதி நேர்மையாக செயற்படுகிறார்! அரசாங்கம் பொய்யான நடிப்பில் ஈடுபட்டுள்ளது!– பிரேமஜயந்த
Page 1 of 1

அரசாங்கம் பொய்யான நடிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் எனினும் ஜனாதிபதி நேர்மையான முயற்சியுடன் செயற்பட்டு வருவதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கணக்காய்வு சட்டமூலம், தகவல் அறியும் சட்டமூலம் ஆகிய முற்போன சட்டமூலங்களை ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் இன்னும் நிறைவேற்றவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற ஆதரவு வழங்கியது போல், எமது கட்சி 20வது அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றவும் ஆதரவு வழங்கும்.
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டதன் காரணமாகவே 19வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு வழங்கப்பட்டது.
10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்குவதாக பிரதமர் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற எந்த வேலைத்திட்டங்களும் இல்லை.
இளைஞர், யுவதிகளுக்கு சுவிங்கம், பிரேஸ்லட் வழங்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒரு காலத்தில் ஆடம்பர கதைகளை கூறியிருந்தார் எனவும் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் தெளிவான வேலைத்திட்டம் உள்ளது. அதற்கமைய ஏற்கனவே நடவடிக்கைகள் தயாராக உள்ளன எனவும் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» முன்னாள் ஜனாதிபதி பின்பகுதி உடைந்த கட்டெறும்பை போல் செயற்படுகிறார்!– அமைச்சர் விஜயமுனி
» முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தேசிய அரசாங்கம் அவசியம்: ஜனாதிபதி
» சஜித் பிரேமதாச வெறுப்பில் இருக்கின்றார்!- ஜனாதிபதி - அரசாங்கம் மிகவும் இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது!– சஜித் பிரேமதாச

Permissions in this forum:
You cannot reply to topics in this forum