Top posting users this month
No user |
சஜித் பிரேமதாச வெறுப்பில் இருக்கின்றார்!- ஜனாதிபதி - அரசாங்கம் மிகவும் இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது!– சஜித் பிரேமதாச
Page 1 of 1

சஜித் பிரேமதாசவுக்கும் தற்போது வெறுப்பு ஏற்பட்டுள்ளது போல் தெரிவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தெபரவெவ பிரதேசத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சஜித் இந்த மேடையில் ஏறாவிட்டாலும் பிலியந்தல மேடையில் ஏறுவாரோ என்று எனக்கு தெரியாது. அவர் அந்த மேடையில் ஏறினாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன்.
சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியிலேயே இருக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
ஐக்கிய தேசியக் கட்சி வீழ்ச்சியடைய போகிறது. அந்த கட்சியை கொஞ்சம் பார்த்து கொள்ளுங்கள். என்னிடம் வராவிட்டால் பரவாயில்லை. எனக்கு வாக்களித்தால் போதும்.
ஹக்கீம் கிழக்கில் தனியான முஸ்லிம் வலயம் ஒன்றை கோருகிறார். எப்படி முஸ்லிம் வலயம் ஒன்றை வழங்க முடியும்?. இது மிகவும் அநீதியானது.
என்னிடம் இவ்வளவு வாக்குகள் உள்ளதாக ஹக்கீம் கூறினார். நீங்கள் வாக்குகளை வைத்து கொள்ளுங்கள் நான் நாட்டை வைத்து கொள்கிறேன் என்று அவரிடம் கூறினேன்.
வடக்கில் பிரபாகரனின் நண்பர்களையும் இந்த பக்கத்தில் இருந்து ஹக்கீம் போன்றவர்களை தம் பக்கம் இழுத்து கொண்டு பெரிதாக சத்தமிடுகின்றனர் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் மிகவும் இழி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது – சஜித் பிரேமதாச
அரசாங்கம் மிகவும் இழிந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எனது தொலைபேசிக்கு இன்று அழைப்புக்கு மேல் அழைப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
போகின்றீர்களா போகின்றீர்களா என கேட்கின்றார்கள்.
தெம்பரவௌ கூட்டமைப்பு மேடையில் ஏறப் போகின்றீர்களா என கேட்கின்றார்கள்
பிரமேதாசவின் மகன் ஆளும் கட்சியில் இணைந்து கொள்கின்றார் எனக் கூறியே தெம்பரவௌ கூட்டத்திற்கு ஆட்கள் திரட்டப்படுகின்றனர்.
சஜித் பிரேமதாச கட்சி மாறப் போகின்றாராம். பிரதமர் பதவிக்காக வெற்றிலைக்கு ஆதரவளிக்கப் போகின்றார் என்றெல்லாம் வதந்திகள் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. வெற்றிலையின் பெறுமதியற்ற (ஐந்துசதம் பெறுமதியற்ற) பிரதமர் பதவி யாருக்கு வேண்டும்.
நீங்கள் நினைக்கின்றீர்களான அந்தப் பதவியை நான் ஏற்றுக்கொண்டு கட்சி மாறுவேன் என்று?
எதிர்காலத்தில் இந்த நாட்டின் தலைவனாக மக்கள் என்னை உருவாக்க இருக்கும் நிலையில் அவ்வாறான தீர்மானங்களை நான் எடுப்பேனா?
இன்று அரசாங்கம் கூட தொன் கணக்கில் பொய்களை வாரி இறைக்கத் தொடங்கியுள்ளது.
இந்த போலிப் பிரச்சாரங்கள் அனைத்தும் மக்கள் பலத்தினால் முறியடிக்கப்படும் என சஜித் பிரேமதாச தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது இன்று இதனைத் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum