Top posting users this month
No user |
Similar topics
ஜனநாயகத்தில் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் கண்ணாக இருக்க வேண்டும்: கி.துரைராஜசிங்கம்
Page 1 of 1

தற்போதைய நிலையில் நாம் எமது பரப்பினை இன்னும் அதிகரிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம், அரசியல் மாற்றங்கள் பல்வேறு விதமாக இடம்பெற்று விட்டதுடன், ஜனநாயகத்தில் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தான் நாம் எப்போதும் கண்ணாக இருக்க வேண்டும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநாகர எல்லைப் பிரதேசமான மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டதற்குப் பிறகு நாங்களும் ஏதோவொரு விதத்திலே அரசோடு உறவாடக் கூடியவர்களாக இருக்கின்றோம்.
இன்னும் பெரிதாக பங்காளிகள் என்ற அளவிற்குச் செல்லாத போதிலும், கிழக்கு மாகாணத்தில் ஓரளவு பங்காளிகளாக இருக்கின்றோம்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களுடையதும் சிங்களவர்கள் மத்தியில் மஹிந்தவிற்கு எதிரானவர்களும் செய்திருக்கும் காரியம் சற்று நின்று சிந்திக்க வேண்டிய விடயம்.
ஏனெனில் எவ்வளவு மிகப்பெரிய காரியத்தை மிகச் சாதாரணமாக செய்து காட்டி இருக்கின்றோம்.
இதில் எமது வாக்குரிமையின் பலத்தினை உணர வேண்டும்.
இந்தப் போர் நடைபெற்றதன் பிறகு உலக நாடுகள் நிதிகளை வாரி வாரி வழங்கியது.
சுனாமி மற்றும் போரால் பாதிக்கப்பட்டவற்றைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளை மேற்கொள்வதற்குக் கொடுத்தது.
ஆனால் அப்போதைய அரசு அனைவரின் கண்ணுக்குள் மண்ணைத் தூவிவிட்டு விமானம் இறங்க முடியாத இடத்தில் விமான நிலையம், கப்பல் தரிக்க முடியாத இடத்தில் துறைமுகம் இவ்வாறு செய்து வேறுவிதமாக புரட்டியடித்தார்கள்.
அத்துடன் வடக்கு, கிழக்கு எங்கிலும் இராணுவத்தளங்களை மிகவும் வலுவுள்ளதாக்கியும், சொகுசு தங்க மாளிகைகளும் அமைத்தார்கள்.
எமக்கான அபிவிருத்திக்கு வந்த நிதிகள் தான் அவ்வாறு உபயோகிக்கப்பட்டன.
உண்மையில் வழங்கப்பட்ட நிதிகள் அனைத்தும் இந்நாட்டு மக்கள் என்ற ரீதியில் இங்குள்ள மக்கள் அனைவருக்காகவும் ஒழுங்காகப் பயன்டுத்தப்பட்டு இருக்குமாக இருந்தால் ஆறு ஆண்டுகளில் நாடு மிகவும் உன்னதமாகக் கட்டியெழுப்பப்பட்டிருக்கும்.
இந்நிலையில் நாம் தொடர்ந்து அபிவிருத்தி மற்றும் அரசியல் என்ற ரீதியில் எமது நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
தற்போதைய நிலையில் நாம் எமது பரப்பினை இன்னும் அதிகரிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
அரசியல் மாற்றங்கள் பல்வேறு விதமாக இடம்பெற்று விட்டன.
ஜனநாயகத்தில் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தான் நாம் எப்போதும் கண்ணாக இருக்க வேண்டும்.
நாம் தற்போது எமது மாகாணத்தில் எமக்கு கிடைத்திருக்கும் அமைச்சு என்கின்ற உரிமத்தினைப் பெற்று மத்திய அரசாங்கத்தில் இருந்து நிதியைப் பெற்று எமது மக்களுக்கான மேலதிக சேவையினைப் பெற முடியும்.
அதற்கு மத்திய அரசு எமக்கு சார்பான அரசாக இருக்க வேண்டும்.
இப்போது ஓரளவுக்கு அது இருக்கின்றது.
எனவே இனி வருகின்ற காலத்திலும் அது எமக்கு சார்பான அரசாக இருக்க வேண்டுமாக இருந்தால் இனிவரும் தேர்தலில் சிங்கள மக்கள் தங்கள் தலைவிதியைத் தீர்மானித்து அங்கு ஒரு தேசிய அரசை ஏற்படுத்த முயற்சிக்கின்ற அதேவேளையில் நாங்கள் இங்கிருந்து அனுப்பக் கூடிய பிரதிநிதிகள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளாக இருக்க வேண்டும்.
அது இந்த அரசாங்கத்திற்கும் வெளியுலகத்திற்கும் ஒரு செய்தியைச் சொல்லும்.
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தான் இருக்கின்றார்கள் என்ற செய்தியை இந்த அரசுக்கு அது சொல்லும்.
எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விருப்பத்திற்கும், அதன் நெறிவுறுத்தலுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனைக்கும் ஏற்ப அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பதை நாம் இதன் மூலம் சுட்டிக்காட்டுவதாக இருக்கும்.
இலங்கை வாழ் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இன்னும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குத் தான் தங்களின் ஆணையை கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
எனவே நாங்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய விதத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டிற்கு சர்வதேசத்தினையும் கொண்டு வர வேண்டும்.
ஆகவே இவ்வாறான கைங்கரியத்தினைச் செய்வது தான் தமிழ் மக்கள் இன்னும் உணர்வோடு இருக்கின்றார்கள் என்பதைக் காட்டக் கூடிய ஒரு விடயமாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சிங்கள பௌத்தர்கள் மஹிந்தவை பாதுகாக்க வேண்டும்: ஞானசார தேரர்
» இனவாத சக்திகளிற்குள் சிக்கியுள்ள எமது கட்சியின் தலைமையை பாதுகாக்க வேண்டும்: எம்.எஸ்.சுபைர்
» மனித உரிமை செயற்பாட்டாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மனித உரிமை ஆணைக்குழு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum