Top posting users this month
No user |
Similar topics
பதுளை மண் சரிவு! உயிரிழப்பு 10ஆக அதிகரிப்பு: பலரைக் காணவில்லை- அம்பேவெல ரயில் பாதை சேதம்
Page 1 of 1

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பதுளை மக்கள் மீண்டுமொரு மண்சரிவு அனர்த்தத்தில் தங்களது உறவுகளை இழந்துள்ளனர்.
இன்று பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
கல்கந்த பகுதியில் வீடொன்றின் மீது, மற்றுமொரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹெகொட பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில், இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், பஹலகம பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் மற்றுமொரு பெண் உயிரிழந்துள்ளார்.
பதுளை – மகியங்கனை வீதியின், சிறிகெத்த பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மற்றுமொரு பெண் உயிரிழந்துள்ளதாக அப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, வேவல்ஹிண்ண ரில்பொல – மெதகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடுகள் சிலவற்றுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தில் சிலர் காணாமற் போயுள்ளதாகவும் பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், மண்சரிவில் சிக்கி காணாமற்போனவர்களை மீட்கும் நடவடிக்கைகள் ஈடுபட்டிருக்கின்றனர்.
மண்சரிவினால் அம்பேவெல ரயில் பாதை சேதம்
மலையக ரயில் பாதையுடான அனைத்து ரயில் சேவைகளும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது.
மண்சரிவு மற்றும் வௌ்ளநிலை காரணமாக மலையக ரயில் பாதைகள் சில பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் அம்பேவெல புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் பாதை மண்சரிவினால் முற்றாக சேதமடைந்துள்ளது.
இதனால் இன்று காலை கொழும்பு கோட்டையில் இருந்து பயணத்தை மேற்கொள்ளத் தயாராக இருந்த பொடிமெனிக்கே மற்றும் கடுகதி ரயில்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
மேலும் கண்டியிலிருந்து கொழும்பு பயணத்தை மேற்கொள்ள தயாராக இருந்த ரயிலும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது.
இதன் காரணமாக கொழும்பிலிருந்து பதுளை, கண்டி மற்றும் மாத்தளை ஊடாக பயணிக்கும் அனைத்து ரயில் சேவையும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கையில் பாரிய பொருளாதார சரிவு: டாக்டர் நாலக கொடஹேவா
» வர்ண மீன் பிடிக்கும் மீன்வாடி தீக்கிரை: இயந்திரங்களுக்கும் சேதம்
» பதுளை ஸ்ரீ மாணிக்க விநாயக கதிர் வேலாயுத சுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum