Top posting users this month
No user |
Similar topics
மண்டூர் சம்பவம் தேர்தல் காலத்தில் கட்சிகள் சுதந்திரமாக செயற்பட முடியாது என்பதை வெளிக்காட்டுகிறது: அரியநேத்திரன்
Page 1 of 1

பொதுத்தேர்தல் வருவதற்குரிய சந்தர்ப்பம் ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில் தேர்தல் காலத்தில் கட்சிகள் சுதந்திரமாக செயற்பட முடியாது என்பதை மண்டூரில் நடந்த துப்பாக்கிசூட்டு சம்பவம் வெளிக்காட்டியுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
இன்று காலை மட்டக்களப்பில் உள்ள தமிழரசுக் கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
மண்டூரில் சமூக சேவைகள் உத்தியோகஸ்த்தர் பாதுகாப்பு நிறைந்த பிரதேசத்துக்குள் ஆயுததாரிகள் வந்து அவரை சுட்டுபடுகொலை செய்துவிட்டு சுதந்திரமாக செல்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகவே உள்ளது.
வித்தியாவின் படுகொலையென்பது கிராம மக்களின் பங்களிப்புடன் சந்தேக நபர்கள் ஒருவாரத்திற்குள் கைது செய்யப்பட்டுவிட்டனர்.ஆனால் இங்கு அரசாங்க உத்தியோகஸ்தர் வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
2009ஆம் ஆண்டு மே மாதத்துக்கு பின்னர் மகிந்த ஆட்சிக்காலத்தில் கூட ஒரு அரசாங்க ஊழியர் சுட்டுக்கொல்லப்படவில்லை.
அந்த ஆறு வருடங்களில் பல கெடுபிடிகள் இருந்தது.ஆனால் ஆயுததாரிகளினால் எந்த அரசாங்க உத்தியோகஸ்தரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக வரலாறு இல்லை. ஆனால் நல்லாட்சி என்று சொல்லப்படுகின்றன மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இது ஒரு பாரதூரமானதும், கண்டனத்துக்குரிய விடயமுமாகும். இதற்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமும், படைத்தரப்பினரும் ஏற்றுக்கொண்டு இக்குற்றச் செயலுடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைதுசெய்வதற்கான நடவடிக்கையினை விரைந்துமேற்கொள்ளவேண்டும்.
நாங்கள் இது தொடர்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்திருந்தோம் ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் கோரியதற்கு இணங்க அரசாங்கத்துக்கு ஒரு வாரகால அவகாசம் வழங்கியுள்ளோம்.
அந்த ஒருவார காலத்துக்குள் குற்றவாளிகள் கைதுசெய்யப்படாவிட்டால் எமது போராட்டம் தொடரும். பொதுத்தேர்தல் வருவதற்குரிய சந்தர்ப்பம் ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில் தேர்தல் காலத்தில் கட்சிகள் சுதந்திரமாக செயற்படமுடியாது என்பதை இந்த துப்பாக்கிசூட்டு சம்பவம் வெளிக்காட்டியுள்ளது.
இந்த துப்பாக்கிசூட்டு சம்பவம் தொடர்பிலான உண்மையான காரணங்கள் வெளிக்கொணரும்போது மக்கள் மத்தியில் உள்ள அச்சநிலை நீக்கப்படும் என்றார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» என்னால் ஜெனீவாவில் சுதந்திரமாக செயற்பட முடியவில்லை: மஹிந்த சமரசிங்க
» எமது வளங்களை சுரண்ட எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது: அரியநேத்திரன்
» வாக்குறுதியளிக்கப்பட்ட காலத்தில் தேர்தல் இடம்பெறும்!– கபீர் ஹாசிம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum