Top posting users this month
No user |
Similar topics
பொதுத் தேர்தல் தொடர்பான கூட்டணி பேச்சில் ஈடுபடும் பிரதான கட்சிகள்
Page 1 of 1

இலங்கையின் அரசியல் கட்சிகள் தற்போது எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாகவே கூடிய கவனத்தை செலுத்தி வருகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சி தம்முடன் இணைந்து போட்டியிட விரும்பு அரசியல் கட்சிகளை இணைத்து கொள்ள உள்ளது. அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தம்முடன் இணைந்து போட்டியிடக் கூடிய கட்சிகள் எவை என்பது ஆராய்ந்து வருகின்றது.
இதனடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் சிலர், ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஹெல உறுமயவின் சார்பில் ஓமல் சோபித தேரர், அத்துரலியே ரத்ன தேரர், சம்பிக்க ரணவக்க, நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சரியான வழிக்கு கொண்டு வர வேண்டும் எனவும் கட்சியின் கொள்கைகளை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் குழி தோண்டி புதைத்து விட்டது எனவும் அடுத்த தேர்தலில் கட்சியை சரியான வழிக்கு இட்டுச் செல்ல வேண்டும் எனவும் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சுதந்திரக் கட்சியையும் ஜாதிக ஹெல உறுமயவையும் எடுத்துக்கொண்டால் இரண்டு கட்சிகளும் நெருங்கத்தை கொண்டுள்ளன எனவும் சுதந்திரக் கட்சியுடனேயே தமது கட்சிக்கு மிக நெருக்கமான பிணைப்பு இருப்பதாக சம்பிக்க ரணவக்க இதன் போது கூறியுள்ளார். அப்படியானால், நீங்கள் எங்களுடன் இணையுங்கள், ஒன்றாக தேர்தலை சந்திக்கலாம் என சுதந்திரக் கட்சியினர் யோசனை முன்வைத்துள்ளனர்.
அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தும் கட்சிக்கு அழைப்பு வந்துள்ளதாக நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க கூறியுள்ளார். தங்களுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடலாம் என ஐக்கிய தேசியக் கட்சியினர் யோசனை முன்வைத்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் ஜாதிக ஹெல உறுமயவிற்கு தற்போது மூன்று வாய்ப்புகள் உள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது அல்லது சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது இல்லாவிட்டால் தனித்து போட்டியிடுவது ஆகிய தெரிவுகள் அந்த கட்சிக்கு உள்ளன. எனினும் இதுவரை ஜாதிக ஹெல உறுமய தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை கூறப்படுகிறது.
அதேவேளை மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, அமைச்சர் திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய முன்னணி உள்ளிட்ட தென் பகுதியை சேர்ந்த சிறுபான்மை கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தே போட்டியிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் முஸ்லிம் காங்கிரஸ் அது குறித்து இன்னும் தீர்மானங்களை எடுக்கவில்லை. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகித்து வருவதுடன் பொதுத் தேர்தலில் போட்டியிட அந்த கட்சியுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணிக்குள் வர முயற்சிக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கியது. மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த நிலையில், ஆறுமுகன் தொண்டமான் அமைதியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நடைமுறையில் இருக்கும் தேர்தல் முறையில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: சிறிய கட்சிகள்
» மண்டூர் சம்பவம் தேர்தல் காலத்தில் கட்சிகள் சுதந்திரமாக செயற்பட முடியாது என்பதை வெளிக்காட்டுகிறது: அரியநேத்திரன்
» பெப்ரவரி மாதத்தில் பொதுத் தேர்தல்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum