Top posting users this month
No user |
என்னால் ஜெனீவாவில் சுதந்திரமாக செயற்பட முடியவில்லை: மஹிந்த சமரசிங்க
Page 1 of 1

மஹிந்த அரசாங்கத்தில் வெளிநாட்டுக் கொள்கையில் இருந்த சில குறைபாடுகள் காரணமாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அழுத்தங்கள் ஏற்பட்டதுடன், புதிய அரசாங்கத்தினால் ஐ.நா அறிக்கை தாமதப்படுத்தப்பட்டமை வரவேற்கத்தக்கது.
சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் முன்னாள் ஜனாதிபதியின் மனித உரிமைகள் விவகாரங்கள் தொடர்புக்கான விசேட பிரதிநிதியும் முன்னாள் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட இருந்த அறிக்கை தாமதப்படுத்தப்பட்டமை புதிய அரசாங்கத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி.
இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இலங்கையில் முன்னேற்றகரமாக வேலைத்திட்டங்களை மேற்கொள்ளமுடியும்.
மேலும் மனித உரிமைகள் என்பது அரசாங்கத்தில் இல்லை, மாறாக பொது நலன் கருதி மேற்கொள்ளப்படும் என முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
30 ஆண்டு கால யுத்தத்தினை நிறைவு செய்ய பல வழிகளில் உதவி செய்த இந்தியாவை நாம் இன்று மறந்துவிட்டோம், அதேபோல் அமெரிக்காவின் ஆதிக்கத்தையும் மதிக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
2009ம் ஆண்டு மனித உரிமை ஆணைக்குழுவில் இணைந்து கொண்ட அமெரிக்காவின் குடியரசுக் கட்சி மனித உரிமை விவகாரத்தில் பெரிதாக அக்கறைகாட்டாத போதிலும்,
பராக் ஒபாமாவின் அரசாங்கத்தின் ஜனநாயக கட்சி மனித உரிமை விவகாரங்களில் முக்கிய கவனம் செலுத்தியது.
இதற்கு ஐரோப்பா, ஆபிரிக்கா ஏனைய ஆசிய நாடுகள் ஒத்துழைப்பு வழங்கின, எனினும் நாம் இதனை புரிந்து கொள்வில்லை.
எனினும் ஐ.நாவின் பாதுகாப்புச் சபையிலிருக்கும் சீனா, ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளும் இலங்கைக்கு ஆதரவு வழங்கிய போதிலும் மனித உரிமைகள் ஆணைக்குழு நடத்திய தேர்தலில் திசைதிருப்ப முடியாமல் போனது.
இது குறித்து தெளிவாக புரிந்து கொண்ட நான் முன்னாள் ஜனாதிபதியிடம் தெரிவித்தேன்.
எமது இராஜதந்திர சேவையில் அரசியல் ரீதியான நியமனங்கள் அதிகரித்து இருந்தன.
லக்ஷமன் கதிர்காமர் காலத்தோடு ஒப்பிடுகையில் 65% அரசியல் நியமனங்கள் கடந்த அரசில் காணப்பட்டன.
யுத்தத்திற்கு பிறகு மனித உரிமை விவகார அமைச்சு ஒன்றை நாம் தவிர்த்தது பாரிய பிழை. 2014ம் ஆண்டு நான் ஜெனீவாவுக்கு செல்லும்போது நிலைமை தலைகீழாக இருந்தது.
இந்நிலையில் என்னால் சுதந்திரமாக செயற்பட முடியாத நிலையில் எனக்கு வழங்கிய தற்காலிக அதிகாரங்களைக் கொண்டு நான் செயற்பட்டேன் என முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum