Top posting users this month
No user |
Similar topics
காணாமல்போனதாகக் கூறப்பட்ட இருவர் குச்சவெளி பொலிசாரால் கைது
Page 1 of 1

தொழில் நிமிர்த்தம் மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை சென்ற இரு வியாபாரிகள் மீண்டும் வீடு திரும்பவில்லை என வாழைச்சேனை பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த இருவர் நேற்று அதிகாலை 4 மணியளவில் தொழில் நிமிர்த்தம் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டைப் பிரதேசத்திற்குச் சென்றிருந்த நிலையில் இதுவரை அவர்கள் வீடு திரும்பவில்லை என அவர்களின் குடும்பத்தினர் பொலிசாரிடம் முறைப்பாடு செய்திருந்துள்ளனர்.
ஓட்டமாவடி 02ம் வட்டாரம் பி.எஸ் வீதியைச் சேர்ந்த சஹாப்தீன் நாசர் மற்றும் இஸ்மாலெப்பை அதம்பாவா ஆகியோரே இவ்வாறு காணாமல் போயிருந்தனர்.
இவர்கள் இருவருமே படகின் இயந்திரம் கொள்வனவு செய்வதற்காக பணத்துடன் திருகோணமலை சென்றுள்ளனர்.
எனினும் இவர்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு மதியம் வரை அழைப்பை ஏற்படுத்த முடியாமலும்,அவர்களிடம் இருந்து பதில் எதுவும் கிடைக்காத நிலையில் இருந்துள்ளது.
இதனை தொடர்ந்து அன்று பிற்பகல் தொடக்கம் தொலைபேசியும் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் பொலிசாரிடம் முறையிட்டுள்ளனர்.
இந்நிலையில் இவ்விருவரும் குச்சவெளி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக காணாமல் போனவர்களது உறவினர்கள் இன்று தெரிவித்தனர்.
குறித்த இருவரும் படகு இயந்திரங்களை கொள்வனவு செய்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனை செய்யும் வியாபாரிகள் எனவும் இவர்கள் விற்பனை செய்த படகு இயந்திரங்களில் சில திருடப்பட்டு திருடர்களால் இவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமையினால் குச்சவெளி பொலிஸார் இவர்களை கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது.
குச்சவெளி பொலிஸ் பிரிவில் படகு இயந்திரங்கள் திருட்டுடன் சம்பந்தப்பட்ட சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், சந்தேக நபர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் தொடர்பாக குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மேலும் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சரண குணவர்தனவின் இணைப்புச் செயலாளர் இரகசியப் பொலிசாரால் கைது
» அம்பாறை மாவட்டத்தில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது
» கஞ்சா வைத்திருந்த இருவர் வவுனியாவில் கைது
» அம்பாறை மாவட்டத்தில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது
» கஞ்சா வைத்திருந்த இருவர் வவுனியாவில் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum