Top posting users this month
No user |
Similar topics
வெந்தயக்கீரை சாம்பார்
Page 1 of 1
வெந்தயக்கீரை சாம்பார்
வெந்தயக்கீரை - ஒரு கட்டு
வெங்காயம் - 2
தக்காளி - ஒன்று
துவரம் பருப்பு - அரை கப்
புளி - நெல்லிக்காய் அளவு
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
ஆச்சி சாம்பார் பொடி - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய்
கடுகு
உளுந்து
வெந்தயம்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயம் - சிறிய துண்டு
தேவையான பொருட்களை எடுத்து வைக்கவும். புளியை நீரில் ஊற வைக்கவும். வெந்தயக்கீரையை உருவி தண்ணீரில் அலசி வைக்கவும், பருப்பை வேக வைத்து எடுத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை போடவும்.
பிறகு வெங்காயம், தக்காளி போட்டு நன்கு வதங்கியதும் வெந்தயக்கீரையை போட்டு கிளறவும்.
இப்பொழுது பொடி வகைகளை போடவும்.
கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீர் மற்றும் வேக வைத்த பருப்பு, உப்பு சேர்த்து கிளறவும்.
சாம்பார் நன்றாக கொதி வந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சத்தான வெந்தயக்கீரை சாம்பார் தயார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum