Top posting users this month
No user |
சாம்பார் பொடி இல்லா சாம்பார்
Page 1 of 1
சாம்பார் பொடி இல்லா சாம்பார்
துவரம்பருப்பு - 1 கப்
சின்ன வெங்காயம் - 5
தக்காளி - 2
முள்ளங்கி - 200 g
மிளகாய் தூள் - 1/2 tsp
தனியா தூள் - 1/2 tsp
மஞ்சள் தூள் - 1/4 tsp
புளி - 1 நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - 2 tsp
கடுகு - 1/4 tsp
பெருங்காயம் - சிறிதளவு
கொத்தமல்லி, கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
துவரம்பருப்பை நன்கு கழுவி மஞ்சள் தூள் சிறிதளவு பெருங்காயம் தக்காளி 2 சொட்டு எண்ணெய் சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு இறக்கவும்.
தக்காளியை தனியாக எடுத்து வைத்து விட்டு பருப்பை கடைந்து வைக்கவும்.
புளியை 1/2 கப் தண்ணீரில் கரைத்து வைக்கவும்.
1 tsp எண்ணையில் வெங்காயம் தாளித்து வேகவைத்த தக்காளியை பிழிந்து வதக்கவும். நன்கு வதங்கியதும் அறிந்துவைத்துள்ள காயை மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
1 கப் தண்ணீர், உப்பு மற்றும் எல்லா தூளையும் சேர்த்து கொதிக்கவிடவும்.
10 நிமிடம் கழித்து கடைந்து வைத்துள்ள பருப்பை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு புளி தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
மீதமுள்ள எண்ணெய் சூடு செய்து கடுகு பெருங்காயம் கருவேப்பிலை தாளித்து சாம்பாரில் கொட்டி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum