Top posting users this month
No user |
Similar topics
வெஜிடபிள் குருமா 1
Page 1 of 1
வெஜிடபிள் குருமா 1
உருளைக்கிழங்கு - 4
காரட் - 2
பச்சை பட்டாணி - ஒரு கப்
சிறிய காலிஃப்ளவர் - ஒன்று
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 2
பூண்டு - 6 பல்
துருவிய தேங்காய் - ஒரு கப்
தயிர் - ஒரு கப்
கசகசா - ஒரு தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
கிராம்பு - 4
பட்டை - 2 துண்டுகள்
சீரகம் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 1/4 தேக்கரண்டி
மல்லித் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
காய்கறிகளைத் தோல் சீவி, சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியைத் பொடிப்பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கசகசா, சோம்பு, பட்டை, சீரகம் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
அதனுடன் பூண்டு, வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
வெங்காயம் வதங்கி நிறம் மாறியதும் தக்காளி மற்றும் தேங்காய் துருவல் போட்டு மிதமான தீயில் சில நிமிடங்கள் வைத்து இறக்கவும்.
வறுத்தவற்றை மிக்ஸியில் போட்டு தயிர் சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்கறிகளைப் போட்டு வதக்கி, வேக விடவும்.
அத்துடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும்.
பிறகு அரைத்த விழுதைக் காய்களுடன் சேர்த்து கிளறி விட்டு நன்கு வெந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை மூடி வைத்து வேகவிடவும்.
வெந்தவுடன் இறக்கி வைத்து கொத்தமல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum