Top posting users this month
No user |
Similar topics
மண்டூரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சமூகசேவை உத்தியோகத்தர் பலி! - கிழக்கில் மீண்டும் தலைதூக்கும் துப்பாக்கி கலாசாரம்!
Page 1 of 1

மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுட்டுக்கொல்லப்பட்ட நபர் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பணிபுரியும் சமூகசேவை உத்தியோகத்தர் மதிதயான் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கொல்லப்பட்டவர் சத்திரசிகிச்சை ஒன்றை மேற்கொண்டதன் காரணமாக வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் அவரிடம் உரையாடியுள்ளனர்.
இந்த நிலையில் திடீரென துப்பாக்கி சத்தம் கேட்கவே உயிரிழந்தவரின் மனைவி வெளியில் வந்துபார்த்தபோது அவர் இரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார்.
இவர் மீது துப்பாக்கி சூட்டை நடாத்தியவர்கள் உடனடியாக அப்பகுதியில் இருந்து தப்பிச்சென்றதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மைக்ரோ ரக பிஸ்டோல் மூலமே இந்த துப்பாக்கிசூடு நடாத்தப்பட்டுள்ளது.
தலையில் காயமடைந்த மதிதயான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு சென்ற வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.பி.ரசிக்க சம்பத் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் மாவட்ட தடவியல் பொலிஸார் மற்றும் பொலிஸ் புலனாய்வுப்பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தினை கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெயலலிதாவின் மீள்வருகையினால் புலிகள் மீண்டும் தலைதூக்கும் ஆபத்து
» பிரான்சில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: பொலிஸார் ஒருவருக்கு காயம்
» அவன்கார்ட் சம்பவத்தில் சட்டம் எங்கு மீறப்பட்டுள்ளது!- அனுரகுமாரவிடம் கேள்வி எழுப்பும் கம்மன்பில

Permissions in this forum:
You cannot reply to topics in this forum