Top posting users this month
No user |
ஜெயலலிதாவின் மீள்வருகையினால் புலிகள் மீண்டும் தலைதூக்கும் ஆபத்து
Page 1 of 1

தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் தலை தூக்கியுள்ளதால் இலங்கையில் விடுதலைப் புலிகள் மீள தலைதூக்கும் ஆபத்து உள்ளது. எனவே அரசாங்கம் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது.
முள்ளிவாய்க்காலில் சுடரேற்றுவோர் விடுதலைப் புலிகளையே நினைவு கூருகின்றனர். இதற்கு அரசு தடைவிதிக்க வேண்டுமென்றும் அக்கட்சி தெரிவித்தது.
பத்தரமுல்லையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஒவ்வொரு வருடமும் யுத்தம் முடிவுற்ற மே 19ம் திகதி வடக்கில் சிலர் இறந்த விடுதலைப் புலிகளை நினைவு கூர முயற்சிகளை மேற்கொள்கின்றனர். யுத்தத்தில் தமது கணவன்மார் பிள்ளைகள் மற்றும் உறவினர்களை இழந்தவர்கள் அவர்களை நினைவு கூர்ந்து தீபமேற்றுவதை தடைசெய்ய வேண்டுமெனக் கூறுவில்லை. அது நியாயமானது. தத்தமது வீடுகளில் உறவினர்களை நினைவு கூரலாம்.
ஆனால் முள்ளிவாய்க்காலில் தீபமேற்றி நினைவு கூற வேண்டியது அவசியமில்லை. 3 இலட்சத்திற்கும் மேலான தமிழ் மக்களை பலாத்காரமாக புலிகள் பணயக் கைதிகளாக வைத்திருந்த இடமே முள்ளிவாய்க்கால் ஆகும்.
எனவே அங்கு தீபமேற்றுவது விடுதலைப் புலிகளை நினைவு கூருவதே ஆகும். புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கம். எனவே அவர்களை நினைவு கூருவது சட்ட விரோதமாகும். இதனால் முள்ளிவாய்க்காலில் தீபமேற்றுவதை தடைசெய்ய வேண்டும்.
தமிழ் மக்களை இராணுவத்தினரே மீட்டெடுத்தனர். எனவே அவர்களை நினைவு கூர்ந்து தான் தீபமேற்ற வேண்டும். தமிழ் மக்களை அழித்த பிரபாகரனுக்கு சாபம் வழங்க வேண்டும்.
தமிழ் நாட்டில் மீண்டும் ஜெயலலிதா முதலமைச்சர் பதவியில் அமரப் போகிறார்.
எனவே அங்கு மீண்டும் விடுதலைப் புலி ஆதரவு தலைதூக்கும், பிரிவினைக்கு ஆதரவு உருவாகும்.
ஜெயலலிதா மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு உயிர் கொடுக்கும் முயற்சிகளை முன்னெடுப்பார்.
எனவே அரசாங்கம் பாதுகாப்பை உஷார்படுத்த வேண்டுமென்றும் நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum