Top posting users this month
No user |
Similar topics
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் பங்குபெற திருநங்கைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு
Page 1 of 1

தமிழகத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பணிக்கான தேர்வில் பங்குபெற திருநங்கைக்கு அனுமதி வழங்கக் கோரி தேர்வாணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சேலம் கந்தம்பட்டியை சேர்ந்த திருநங்கையான கே.பிரித்திகா யாசினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், கே.பிரதீப்குமார் என்ற பெயரில் பிறக்கும்போது ஆணாக பிறந்த நான், பள்ளி படிப்பு மற்றும் கல்லூரி பட்டப்படிப்பு வரை ஆணாகவே வளர்ந்தேன்.
பின்னர், என் உடலில் ஏற்பட்ட பெண்மை மாற்றத்தை தொடர்ந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்.
இதையடுத்து எனக்கு திருநங்கை என்ற சான்றிதழும், அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.
என் கல்விச் சான்றிதழில் பெயரை மாற்றக்கோரி கல்வித்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து வழக்கு தொடர்ந்துள்ளேன்.
காவல்துறை துணை கண்காணிப்பாளர் பணிக்கு விண்ணப்பித்து, எழுத்து தேர்வுக்கு அழைப்பு கடிதம் வரும் என்று காத்திருந்த நிலையில், எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதை அறிந்தேன்.
அந்த பதவிக்குரிய கல்வித் தகுதி என்னிடம் இருந்தும், திருநங்கை என்ற ஒரே காரணத்துக்காக எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
எனவே, காவல்துறை துணை கண்காணிப்பாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வில் என்னை அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவருக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுக்கள் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பவானி உட்பட பலர் ஆஜராகி வாதிட்டுள்ளனர்.
இதுகுறித்து நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில், மனுதாரர் பிரித்திகா யாசினி உட்பட மனுதாரர்களை எழுத்து தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.
இவர்களுக்கான "ஹால் டிக்கெட்டை" வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்கு இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
அதனை மனுதாரர்கள் பதிவிறக்கம் செய்து தேர்வு மையத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு சென்று தங்களது சான்றிதழ்கள் அனைத்தையும் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், அந்த சான்றிதழ்களை சரிபார்த்து அவர்களை தேர்வு எழுத அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» முதுகலை தேர்வில் பிட் அடித்து மாட்டிகொண்ட காவல்துறை ஐஜி: விசாரணைக்கு உத்தரவு
» பிரபல நடிகையின் வீடு ஜப்தி: நீதிமன்றம் உத்தரவு
» புதுக்குடியிருப்பு கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum