Top posting users this month
No user |
Similar topics
குற்றவாளிகளுக்காக வேண்டாமெனில், 129 பேருக்காக செல்வதும் நியாயமில்லை: சட்டத்தரணிகள்
Page 1 of 1

யாழ். நீதிமன்ற தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 129 பேருக்காக நீதிமன்றத்தில் ஆஜராகுவது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என சட்டத்தரணிகள் தலைவரும், மூத்த சட்டத்தரணியுமான எம்.சிற்றம்பலம் தெரிவித்துள்ளார்.
வவுனியா நீதிமன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு நீதி வழங்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது நீதிமன்றம் தாக்குதலுக்குள்ளாகிள்ளது.
இச்சம்பவம், நீதிச்சேவை அடித்தளத்தை வீழ்த்திய ஒரு சம்பவமாகும். எனவே அதனை வன்மையாக கண்டிப்பதாகவும், நீதித்துறையிலே நம்பிக்கை இல்லாத்தன்மையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதியை வழங்கக் கூடிய ஒரு அமைப்பாக இலங்கையின் நீதித்துறை காணப்படுகிறது. நீதிமன்றத்தை தாக்குவதன் மூலம் நீதியை கோரியவர்கள் எதை அடைய நினைத்தார்களோ தெரியாது.
எனினும் கைது செய்யப்பட்டவர்கள் நீதித்துறையின் மகத்துவத்தை குறைத்து மதிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று யாழில் எமது சகோதர சட்டத்தரணிகள் மேற்கொள்ளும் பணிப்பகிஷ்கரிப்பில் உணர்வுபூர்வமாக பங்கெடுத்து ஆதரவை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வித்தியா கொலை வழக்கில் நமக்கேற்றாற் போல் நீதி வழங்குமாறு கோருவதில் எவ்வித நியாயமுமில்லை.
இலங்கை சட்டத்தின் பிரகாரம் நிச்சயமாக தண்டனை வழங்கப்படும். எனவே குற்றவாளிகளை எம்மிடம் தாருங்கள் நாங்கள் நீதி வழங்குகின்றோம் என நம்மால் கோரமுடியாது. அது காட்டுமிராண்டித்தனமானது.
இலங்கை சட்டத்தின்படி அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க முடியும் என்றால் விதிக்கப்படும். ஆயுள் தண்டனைதான் விதிக்க முடியும் என்றால் அதனைதான் வழங்க முடியும்.
நீதிமன்றத்தை தாக்கிய குற்றச்சாட்டில் கைதானவர்களுக்காக ஆஜராக மாட்டோம் என நாம் தீர்மானிக்கவில்லை.
ஒரு குற்றத்திற்காக ஆஜராக கூடாது என தெரிவிக்கும் போது அதனுடன் தொடர்புடைய மற்றைய குற்றத்திற்காகவும் ஆஜராகமல் இருப்பதே நியாயமானது என எம்.சிற்றம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கைதானவர்களின் விடுதலைக்கு வவுனியா சட்டத்தரணிகள் உதவவேண்டும்
» நிதி மோசடி விசாரணை பிரிவு சட்டரீதியானது: சட்டத்தரணிகள்
» மஹிந்தவுக்கு ஆதரவான சமய நிகழ்ச்சி ஒலி, ஒளிபரப்பை தடுக்க சட்டத்தரணிகள் கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum