Top posting users this month
No user |
Similar topics
பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய 8 வயது சிறுமி
Page 1 of 1

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி தனது சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆக்ராவைச் சேர்ந்த தையபா (Taiyyaba) என்ற 8 வயது சிறுமி 3ம் வகுப்பு படித்து வருகிறார்.
பிறவியில் இருந்தே இதயக் கோளாறால் (congenital heart disease) பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்க பணம் இல்லாமல் கூலி வேலை செய்யும் அவரது தந்தை மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார்.
சிறுமியின் சிகிச்சைக்கு ரூ.15 முதல் 20 லட்சம் தேவைப்படும் என்றும், சிறுமிக்கு டெல்லியில் தான் சிகிச்சை அளிக்க முடியும் ஆக்ராவில் வசதி இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமி பிரதமர் மோடிக்கு தனக்கு உதவி செய்யுமாறு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அவரது கடிதம் கிடைத்த உடன் சிறுமிக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு மத்திய அரசு டெல்லி அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
சிறுமிக்கு உடனே சிகிச்சையை துவங்குமாறு டெல்லியில் உள்ள குரு தேக் பகதூர் மருத்துவமனைக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தையபா கூறுகையில், பிரதமர் மோடி அனைவருக்கும் உதவி செய்வதை தொலைக்காட்சியில் பார்த்தேன்.
நானும் ஒரு இந்திய குடிமகள் என்பதால், வாழ விரும்பும் எனக்கு உதவுமாறு மோடிக்கு கடிதம் எழுதலாம் என்று தோன்றியது.
மேலும், எனக்கு உதவி செய்துள்ள பிரதமருக்கு நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம்
» வங்கதேசத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
» கருப்பு பணத்தை மீட்பது எப்படி? மோடிக்கு சுப்ரமணியன் சாமி கடிதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum