Top posting users this month
No user |
Similar topics
இளைய சமுதாயத்தை அறநெறியின்பால் ஈடுபடுத்தவேண்டும்: சிறீதரன் கோரிக்கை
Page 1 of 1

யாழ்ப்பாணம் வன்னி பகுதிகளில் நடைபெற்றுக்கொண்டிருக்ககூடிய கொலை மற்றும் வன்புணர்வு சம்பவங்கள் அதிர்ச்சியையையும், கவலையையும் ஏற்படுத்தி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வீணாகான இந்து மத பீடத்தின் அங்குரார்ப்பண வைபவம் நேற்று இடம்பெற்றது.இதில் வடக்கு முதலமைச்சர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், இந்துமத பெரியார்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இன்று எமது சூழல், பிறழ்வுகள் நிறைந்ததாய் மாறிக்கொண்டிருக்கின்றது.கருணையற்ற மனப்பாங்கு வளர்ந்துவருகின்றது. அன்பு அறம் அற்றுப்போய்க்கொண்டிருக்கின்றது.வாழ்க்கையின் இலட்சியங்கள் மாறிக்கொண்டிருக்கின்றது.
இந்த நிலையை மாற்ற வல்ல சக்தி அறநெறியிடம் உண்டென நான் கருதுகின்றேன்.நான் இங்கு வடக்கு முதல்வரிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன்.எமது மாணவர்கள், இளைய சமுதாயம் ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிவரையும் வெள்ளிக்கிழமைகளில் 12 மணிக்குப்பிறகும் அறநெறி சார்ந்த பிரார்த்தனைகள், பஜனைகள், பிரசங்கங்களில் கட்டாயமாக ஈடுபடுத்தக்கூடிய ஒரு நடைமுறையை வடக்கு மாகாண சபையின்மூலம் கொண்டுவர ஆவணசெய்ய வேண்டும்.
இதற்கு தனியார் கல்வி நிலையங்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.இதன்மூலம் இளைய சமுதாயத்தில் பொழுதுபோக்கு ஒன்றுகூடல் திசையை மாற்றி சமூக ஒழுங்குக்குள் கொண்டுவர உதவியாக இருக்கும்.
இப்பொழுது உருவாக்கப்பட்டுள்ள இந்துமத பீடமும் அத்தகைய சமூகப்பணிகளை மேற்கொள்ளவேண்டுமெனவும் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இளைய சமுதாயத்தை அழிக்க கடல் வழியாக யாழ் வந்த 150 கிலோ கஞ்சா! : ஒரு முஸ்லிம் நபர் உட்பட 4 பேர் கைது
» மருதங்கேணி பிரதேச செயலக பணியாளர்களுடன் சி.சிறீதரன் எம்.பி சந்திப்பு
» சுண்டிக்குளத்தில் தொடரும் ஈ.பி.டி.பி. உறுப்பினரின் அட்டூழியம்: சிறீதரன் குற்றச்சாட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum