Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ராஜிவ் கொலை வழக்கு: விசாரணைக்கு வருகிறது பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை வழக்கு

Go down

ராஜிவ் கொலை வழக்கு: விசாரணைக்கு வருகிறது பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை வழக்கு Empty ராஜிவ் கொலை வழக்கு: விசாரணைக்கு வருகிறது பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை வழக்கு

Post by oviya Mon May 18, 2015 3:01 pm

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை யூலை 15ம் திகதி நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 1991ம் ஆண்டு மே 21ம் திகதி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் 1998ம் ஆண்டு ஜனவரி 28ம் திகதி முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட 26 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.

பின்னர் இவர்களில் 19 பேரை விடுவித்த உச்சநீதிமன்றம், மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகவும் குறைத்தது.

இந்நிலையில், பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், மத்திய அரசின் ஒப்புதலை தமிழக அரசு கேட்டது. ஆனால், இது தொடர்பாக மத்திய அரசு தாமதிக்கவே, 7 பேரையும் விடுதலை செய்வதாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.

ஆனால் தமிழக அரசின் இந்த முடிவுக்கும், தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றிய உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கும் தொடர்ந்தது.

இந்த மனுவை விசாரித்த அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கொண்ட அமர்வு, இந்த வழக்கை 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.

பின்னர் இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 7 பேரின் விடுதலையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டு வழக்கு விசாரணையை திகதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.

இந்நிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை எதிர்த்த வழக்கு மீதான விசாரணை யூலை 15ம் திகதி தொடங்கும் என்று உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum