Top posting users this month
No user |
Similar topics
சம்பூர் காணி விவகாரம்: அரசை எச்சரிக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன்
Page 1 of 1

வர்த்தமானி அறிவித்தல் மற்றும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் அரசாங்கம் அடுத்த ஒருவார காலத்திற்குள் சம்பூர் மக்களை அவர்களின் இடங்களில் மீள்குடியேற்றம் செய்ய தவறினால் நாம் எமது அடிப்படை உரிமைகளுக்காக ஜனநாயக போராட்டத்தில் குதிக்க வேண்டியேற்படுமென பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சம்பூர் மக்களை அவர்களுடைய சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றும் விடயத்தில் அரசாங்கம் இரட்டைவேடம் போடவேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பூர் காணி விவகாரம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியான பின்னரும் அம்மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் காணப்படும் தாமதம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சம்பூர் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு சொந்தமான காணிகளை முன்னைய அரசாங்கம் முதலீட்டு ஊக்குவிப்புச் சபைக்கு கொடுத்திருந்தது. எனினும் அக்காணிகளில் ஒரு பகுதியை மக்களிடத்தில் கையளிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த எட்டாம் திகதி கைச்சாத்திட்டிருந்தார்.
அதன் பிரகாரம் 207 குடும்பங்களை முதற்கட்டமாக குடியமர்த்துவது எனவும் அதன் பின்னர் கடற்படை பயிற்சி முகாம் அமைந்துள்ள 224 மக்கள் குடியிருப்பு காணிகளை ஐந்து மாத காலத்தினுள் விடுவிப்பதாகவும் அரசாங்கம் அறிவித்திருந்தது.
அந்தநிலையில் முதலீட்டு ஊக்குவிப்புச் சபையின் ஊடாக சம்பூர் பிரதேசத்தில் தமது முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்திருந்த தனியார் நிறுவனமொன்று ,சம்பூர் நிலங்கள் தமக்கு சொந்தமானதென கூறி மக்கள் குடியேற்றுவதை தடுக்கும் வகையில் தற்காலிக தடையுத்தரவொன்றை நீதிமன்றின் மூலம் பெற்றிருக்கின்றது.
ஒரு நாட்டின் அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்ட பின்னர் அதனை எவ்வாறு தடுத்து நிறுத்த முடியும் என்பது பெரும் கேள்விக்குறியே. சர்வதேசத்திடம் தமிழ் மக்களின் மீள்குடியேற்றத்தை விரைவாக செய்து வருகின்றோம் என கூறிக்கொண்டு, காணிகளை விடுவிக்கும் அறிவித்தலை வழங்கிவிட்டு மறுபுறத்தில் அதனை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது.
புதிய அரசாங்கத்தின் நூறுநாள் வேலைத்திட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் சம்பூர் காணிகள் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும் ஆனால் தற்போதுவரையில் அக்காணிகள் மக்களிடம் கையளிக்கப்படவில்லை.
2006 ஆண்டு தங்கள் சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களின் வாழ்க்கை நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் பிரகாரம் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இதன் போது மேலும் வலியுறுத்தியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சம்பூர் காணி விவகாரம்: இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு
» புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு வரவேண்டாம்: சுரேஸ் பிரேமச்சந்திரன்
» தமிழரசுக் கட்சி செயற்பாடுகள் மீது மக்கள் நம்பிக்கையில்லை: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum