Top posting users this month
No user |
Similar topics
தமிழரசுக் கட்சி செயற்பாடுகள் மீது மக்கள் நம்பிக்கையில்லை: சுரேஷ் பிரேமச்சந்திரன்
Page 1 of 1

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் மற்றும் தேசிய பட்டியல் தெரிவில் இலங்கை தமிழரசு கட்சி தன்னிச்சையாக செயற்படுமாயின் கூட்டாக இயங்கும் ஏனைய கட்சிகளுக்கும், மக்களுக்கும் நம்பிக்கை இல்லாமல் போய்விடுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நீர்வேலி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்தேசிய கூட்டமைப்பு கூட்டாக இயங்க வேண்டும். தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வு, தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தினை நடைமுறைப்படுத்துவது போன்ற விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.
அதேபோன்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் அங்கத்தவர்களை தெரிவு செய்யும் போதும் அனைவரும் கூட்டாக இணைந்து செயற்பட வேண்டுமென்பதே மக்கள் ஏற்றுக்கொண்ட விடய என தான் நம்புவதாகவும் அவர் கூறினார். தனித்துவமாக தனி ஒரு கட்சி மட்டும் தன்னிச்சையாக செயற்படுவது சரியான வழிமுறை அல்ல என்றும் அவர் கூறினார்.
குறைந்த ஆசனங்களைப் பெற்ற கட்சிகள் 6 ஆசனங்களை பெற்றிருக்கின்றார்கள். கூடுதலாக போட்டியிட்ட இலங்கை தமிழரசு கட்சி கூடுதலாக 2 ஆசனங்களைப் பெற்று அதிகமாக 8 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றார்கள்.
மக்கள் கூட்டாக இயங்க ஆணை கொடுத்திருக்கும் தருணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டாக இணைந்து முடிவுகளை எடுத்தால், இணைந்து செயற்படுகின்ற கட்சிகளுக்கும், மக்களுக்கும் நம்பிக்கை ஏற்படும். அவ்வாறு இல்லாமல் ஒரு கட்சி மட்டும் தானாக முடிவுகளை எடுப்பது கட்சிகளுக்கும் மக்களுக்கும் இருக்கும் நம்பிக்கையினை சீர்குலைக்கும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» புதிய அரசாங்கத்தின் மீது மக்களுக்கு முழு நம்பிக்கையில்லை: பிரிட்டிஷ் குழுவிடம் விக்னேஸ்வரன் தெரிவிப்பு
» ஐ.தே.கவிற்கு எதிரான மக்கள் பேரணி: லங்கா சமசமாஜ கட்சி
» மக்கள் சக்திக்கு முன்னால் அரசாங்கத்தின் திட்டங்கள் தவிடு பொடியானது: ஐ.தே.கட்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum