Top posting users this month
No user |
சம்பூர் காணி விவகாரம்: இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு
Page 1 of 1

சம்பூர் காணி தொடர்பான இடைக்காலத் தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வழக்கு அடுத்த மாதம் 10ஆம் திகதிவரை உயர்நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கானது, நேற்று திங்கட்கிழமை விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த போதும், விசாரணைகளின்றி எதிர்வரும் 10ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
சம்பூர் மக்கள் சுமார் 9 ஆண்டுகளாக தங்களது சொந்தக் மண்ணில் குடியேறமுடியாமல் தவித்து வரும் நிலையில், கடந்த அரசாங்கம் சம்பூர் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள காணியொன்றை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு தொழிற்சாலை அமைப்பதற்காக வழங்கியிருந்தது.
இத்தீர்மானத்தை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரத்து செய்திருந்தார். ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு எதிராகவே உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.
குறித்த தனியார் நிறுவனமான ஸ்ரீலங்கா கேட்வே இன்டஸ்ட்ரீஸ் தாக்கல் செய்திருந்த மனுவை ஆராய்ந்த போதே நீதிமன்றம் கடந்த மாதம் இந்த தடை உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் சமூகமளித்திருந்ததுடன், குறித்த தனியார் நிறுவனம் சார்பில் அதன் பிரதிநிதிகள் சமூகமளித்திருந்தனர்.
தொழிற்சாலை அமைக்கும் பணிகளுக்காக சுமார் 4 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய வர்த்தமானி அறிவித்தல் காரணமாக தமக்கு பெரும் நஸ்டம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2012 ஆம் ஆண்டு தங்களுக்கு இந்த காணியில் தொழிற்சாலை அமைப்பதற்கான அனுமதியை வழங்கியதாக மனு தாரர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கமைய ஜனாதிபதி, சட்டத்துக்கு முரணாக வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதாகவும், அந்த அறிவித்தலை இரத்து செய்ய உத்தவு பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள் உயர்நீதிமன்றத்திடம் கடந்த மாதம் வாதிட்டிருந்தனர்.
இதேவேளை சம்பூர் அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ள காணிகளை மக்களின் மீள்குடியேற்றத்திற்காக கையளிப்பதாக அரசு அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum