Top posting users this month
No user |
Similar topics
முன்னாள் மத்திய வங்கி ஆளுனரை பாதுகாக்கும் சட்டமா அதிபர்
Page 1 of 1

பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு சட்டமா அதிபர் யுவன்ஜன வனசுந்தர விஜேதிலக்க சட்ட பாதுகாப்பு வழங்கி வருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிங்கள ஊடகமொன்று இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலின் போது மத்திய வங்கியில் இருந்து லொறி மூலம் அலரி மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்ட 100 மில்லியன் அமெரிக்க டொலர் தொடர்பில் தேவைக்கு மேல் சாட்சியங்கள் காணப்படுகின்றது.
எனினும் இதுவரை அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படாமல், சட்டநடவடிக்கை எடுக்கப்படாமல் மூடி மறைக்கப்பட்டு வருவதாக சட்டவல்லுனர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் யுவன்ஜனவை சட்டமா அதிபராக நியமிப்பதற்கு அஜித் நிவாட் கப்ரால் திரைமறைவிலிருந்து செயற்பட்டுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
முன்னாள் மத்திய வங்கி ஆளுனரின் மனைவி,முன்னாள் நீதி அமைச்சின் செயலாளர் தாரா எஸ்.விஜேதிலகவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. தாரா.எஸ்.விஜேதிலகவின் கணவர் 'த சேரம்' சட்டத்தரணிகள் சங்கத்தின் பங்காளரான சிரேஷ்ட சட்டத்தரணி லகீ விஜேதிலக்கவின் இளைய சகோதரரே யுவன்ஜன வனசுந்தர என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் 1970 களில் இருந்த சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.ஆர்.விஜேதிலகவின் மகன்களாவர். முன்னாள் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகள் அசமந்த போக்கில் மேற்கொள்ளப்படுவதற்கு சட்டமா அதிபரின் செயற்பாடே காரணம் என சட்ட வல்லுனர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கே.பி தொடர்பிலான 193 முறைப்பாடுகளுக்கு சாட்சி இல்லை: சட்டமா அதிபர்
» 29 ஆம் திகதி வரை டிரான் அலஸ் கைது செய்யப்படமாட்டார்: சட்டமா அதிபர் உறுதி
» உண்மையை கண்டறியும் குழு மீதான விசாரணை சட்டமா அதிபர் கைகளில் தங்கியுள்ளது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum