Top posting users this month
No user |
Similar topics
16–ந்தேதி சனிப்பெயர்ச்சி விழா: திருநள்ளாறுக்கு சிறப்பு பஸ்கள்
Page 1 of 1

காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் வருகிற 16–ந்தேதி சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது.
விழா ஏற்பாடுகள் தொடர்பாக கலெக்டர் வல்லவன் நிருபர்களிடம் கூறியதாவது:–
சனிப்பெயர்ச்சி விழாவை சிறப்பான முறையில் நடத்தும் வகையில் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேவைப்பட்டால் தமிழக பகுதியிலிருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்படுவார்கள். கோவிலின் உள்பகுதி, வெளிப்பகுதி, நள தீர்த்தம், கியூக்கள், பார்க்கிங் இடங்கள், தற்காலிக பஸ்நிலையங்கள் மற்றும் பல்வேறு முக்கிய இடங்களில் 100 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காக நளன் குளம் பகுதியில் 50–க்கும் மேற்பட்ட நிரந்தர கழிவறைகளும், 70 உடைமாற்றும் அறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி வாகனங்களில் வந்து செல்லும் வகையில் எல்லை பகுதிகளில் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, கன்னியாகுமரி, மதுரை போன்ற பல்வேறு முக்கிய நகரங்களிலிருந்து திருநள்ளாறுக்கு சிறப்பு பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நமது கோரிக்கையை ஏற்று தென்னக ரெயில்வே நிர்வாகம் திருச்சியிலிருந்து கூடுதலாக ரெயில்களை இயக்க உள்ளது.
காரைக்கால் மாவட்ட எல்லை பகுதிகளில் உள்ள தமிழக பகுதிகளில் சேதமடைந்த நிலையில் உள்ள சாலைகளை செப்பனிட்டு உதவும்படி அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நங்கநல்லூர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா 21-ந்தேதி தொடங்குகிறது
» திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா: 10 லட்சம் பக்தர்கள் திரண்டனர்
» திருநள்ளாறில் நாளை சனிப்பெயர்ச்சி விழா: 10 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum