Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா: 10 லட்சம் பக்தர்கள் திரண்டனர்

Go down

திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா: 10 லட்சம் பக்தர்கள் திரண்டனர் Empty திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா: 10 லட்சம் பக்தர்கள் திரண்டனர்

Post by oviya Tue Dec 23, 2014 2:03 pm

காரைக்கால், டிச.16–

புதுவை மாநிலம் காரைக்காலை சேர்ந்த திருநள்ளாறில் உலகப்புகழ் பெற்ற சனீஸ்வரபகவான் கோவில் அமைந்துள்ளது. இது சனிதோஷ நிவர்த்திக்கு பிரசித்தி பெற்ற ஒரே தலமாகும்.

சனிபகவான் 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். அது ‘சனிப்பெயர்ச்சி விழா’வாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு ‘சனிப்பெயர்ச்சி விழா’ இன்று நடைபெறுகிறது. பிற்பகல் சரியாக 2.43 மணிக்கு சனிபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சனி பெயர்ச்சி விழா திருநள்ளாறு கோவிலில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

சனிபெயர்ச்சியையொட்டி நேற்று இரவு சனீஸ்வரபகவான் தங்க காக்கை வாகனத்தில் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தங்ககாக்கை வாகனத்தில் சனீஸ்வர பகவான் எழுந்தருளியதும் பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சனீஸ்வரபகவான் வசந்த மண்டபத்திற்கு உற்சவ மூர்த்தியாக எழுந்தருளினார்.

இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டதும் பகவானுக்கு தனுர்மாத பூஜைகளும், தொடர்ந்து சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது.

சனிபெயர்ச்சி விழாவில் கலந்து கொண்டு பகவானை தரிசனம் செய்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருநள்ளாறுக்கு இன்று காலையில் இருந்தே பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். மதியம் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருநள்ளாறில் குவிந்தனர். பக்தர்கள் முதலில் அங்குள்ள நளதீர்த்தக் குளத்திற்கு சென்று புனித நீராடி விட்டு, குளக்கரையில் உள்ள நளன் கலிதீர்த்த விநாயகர் கோவிலுக்குச் சென்று வழிபட்டு பின்னர் வெளியில் வந்து கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைப்பது வழக்கம்.

எனவே கோவிலுக்கு அடுத்தபடியாக இந்த நளதீர்த்தக் குளத்தில் தான் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

இதற்கு முன்பு இத்திருக்குளத்தில் ஒரே நேரத்தில் சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் வரைதான் குளிக்க முடிந்தது. ஆனால் தற்போது குளம் அழகுபடுத்தப்பட்டு ஒரே நேரத்தில் சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் வரை புனித நீராடுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் குளத்தை சுற்றி 2 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். குளத்தை சுற்றிலும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு பக்தர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. அதுபோன்று கோவிலின் உள்ளேயும், வெளியிலும் மற்றும் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களிலும் சுமார் 100 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு பணியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். நேற்று முதல் கோவிலின் முழுபாதுகாப்பும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. நாளை வரை கோவில் முழுவதும் அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்.

பக்தர்கள் பகவானை தரிசனம் செய்வதற்காக இலவச தரிசன கியூ, ரூ. 200 கட்டண கியூ மற்றும் ரூ. 500 கட்டண கியூ (வி.ஐ.பி) என்று 3 விதமான வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வரிசைகளின் வழியாக கோவிலுக்குள் பக்தர்கள் செல்லும்போது மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பிறகு கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

விழா சிறப்பான முறையில் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட கலெக்டரும், தேவஸ்தான தனி அதிகாரியுமான வல்லவன், கோவில்கள் நிர்வாக அதிகாரி எஸ்.கே.பன்னீர்செல்வம் ஆகியோரும் செய்துள்ளனர்.

திருநள்ளாறுக்கு புதுவை அரசு போக்குவரத்து கழகமும், தமிழ்நாடு காரைக்கால் அரசு போக்குவரத்து கழகமும் சிறப்பு பஸ்களை இயக்குகின்றன. புதுச்சேரி, சென்னை, திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருச்சியில் இருந்து சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டன.

வெளியூர்களிலிருந்து வருகை தரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சிதம்பரம், திருக்கடையூர், நண்டலார், பூவம் மற்றும் நெடுங்காடு மார்க்கத்தில் வரும் வாகனங்கள் சுரக்குடி அருகில் உள்ள பண்டித ஜவஹர்லால்நேரு வேளாண் கல்லூரி வளாகத்திலும், கும்பகோணம், பேரளம், அம்பகரத்தூர் வழியாக திருநள்ளாறுக்கு வரும் வாகனங்கள் செல்லூர் அருகில் உள்ள வி.ஐ.பி. நகரிலும், நாகப்பட்டிணம், காரைக்கால் வழியாக திருநள்ளாறு வரும் வாகனங்கள் காரைக்கால் முருகராமு நகர் அருகில் உள்ள காரை நகராட்சி சந்தை திடலிலும் நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து பக்தர்கள் திருநள்ளாறுக்கு செல்ல சிறியரக வாகனங்களை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum