Top posting users this month
No user |
Similar topics
தந்தையின் வழியில் நானும்: சஜித்
Page 1 of 1
தந்தையின் வழியில் நானும்: சஜித்
எனது தந்தையினால் வீடற்றவர்களுக்கு வீடு பெற்றுக்கொடுக்கும் செயற்திட்டத்தை சர்வதேசமே வரவேற்றது என வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐம்பதாயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் கண்டி பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆயிரம் பேருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா நிதியும் அதற்கான உறுதிப்பத்திரமும் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வு கண்டி மலைநாட்டு கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், ஏழை மக்களின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு வீடற்றவர்களுக்கு வீடுகளைப் பெற்றுக் கொடுக்கும் திட்டம் ஒன்றினை எனது தந்தையார் அமரர் ரணசிங்க பிரேமதாச செயற்படுத்தி வந்தார்.
எனினும் இந்த நாட்டில் தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக இத்திட்டம் சீர்குலைக்கப்பட்டுவிட்டது. எனினும் எனது தந்தையின் வழியில் செயற்பட்டு அத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு வீடற்றோருக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுத்து, அவர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதே எனது பிரதான நோக்கம்.
நான் எனது மாதாந்த சம்பளப்பணத்தை பெறுவதில்லை,அரச வாகனங்களை பயன்படுத்துவதில்லை, அத்துடன் எரிபொருளுக்கான பணத்தை பெறுவதில்லை,இப்பணத்தை கொண்டு ஏழைகளின் வீடற்ற பிரச்சினையை தீர்ப்பதற்கு பயன்படுத்திவருகின்றேன்.
இலங்கையில் 51 இலட்சம் குடும்பங்கள் இருக்கின்றன, இதில் 21 இலட்சம் குடும்பங்கள் குறைந்த வருமானம் பெறுபவர்கள்,இவர்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக எனது பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பேன்.
அத்துடன் வீடில்லாதவர்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கான மூலப்பொருட்களை மலிவான விலைகளில் பெற்றுக்கொடுக்க பல்வேறு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சஜித் பிரேமதாச வெறுப்பில் இருக்கின்றார்!- ஜனாதிபதி - அரசாங்கம் மிகவும் இழிநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது!– சஜித் பிரேமதாச
» எதிரணியில் இணைந்து கொண்ட தந்தையின் முடிவை வன்மையாக கண்டிக்கிறேன்: சிந்தக ஏக்கநாயக்க
» ஜீவாவும்....நானும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum