Top posting users this month
No user |
Similar topics
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றில் மனு தாக்கல்!
Page 1 of 1

பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்குக் கிடைக்கும் தீர்வையற்ற வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களை பிறருக்கு விற்பனை செய்வதற்கு எதிராக உச்ச நீதிமன்றில் இன்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது
இந்நடவடிக்கையினால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ள அம்மனுவில், மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் உயரதிகாரியொருவர் இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
முறைகேடாக பணம் சம்பாதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுங்கத்தீர்வையின்றி வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்படும் அனுமதி பத்திரங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை சுங்க வரித்திணைக்கள செயலணிக்குழுவின் முன்னாள் தலைவர் சட்டத்தரணி நாகாலந்த கொடித்துவக்கு தாக்கல் செய்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விரைவில் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தை உத்தரவிடுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனுவின் பிரதிவாதிகளாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் தில்ருக்ஷி டயஸ், அதன் பணிப்பாளர், ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
சுங்க கட்டளை சட்டத்தின் பிரகாரம் வரையறுக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் மாத்திரமே நிதி அமைச்சரினால் வரி அறவிடும் சந்தர்ப்பங்களை தளர்த்த முடியும் எனவும், அதை வர்த்தமானி அறிவித்தல் மூலம் பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எது எவ்வாறாகயிருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுங்கத்தீர்வையின்றி வாகனங்களை இறக்குமதி செய்ய வழங்கப்படும் அனுமதி பத்திரங்களை அவர்கள் பகிரங்க சந்தையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதினால் முறைகேடாக பணம் சம்பாதித்து கொள்கின்றார்கள் எனவும்,
இதனால் அரசாங்கத்திற்கு பாரியளவில் நட்டம் ஏற்படுவதாகவும் மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மைத்திரிக்கு எதிராக மனு தாக்கல்!
» இரு வாரங்களில் பசிலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
» லலித் வீரதுங்கவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum